இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர அனுபவ வீரரான சத்தீஸ்வர் புஜாரா கடந்த சில ஆண்டுகளாக இந்திய டெஸ்ட் அணியிலிருந்து நிராகரிக்கப்பட்டு வருகிறார். வயது மூப்பு மற்றும் பார்ம் தடுமாற்றம் என சில காரணங்களால் ஒதுக்கப்பட்ட அவருக்கு பதிலாக தற்போது இந்திய அணியின் எதிர்கால நட்சத்திர வீரராக பார்க்கப்படும் சுப்மன் கில் மூன்றாவது இடத்தில் களமிறங்கி விளையாடி வருகிறார். ஆனால் இன்றளவும் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வரும் புஜாரா தனது திறனை வெளிப்படுத்தி வருகிறார்.
வார்னர் என்னை பாத்தாலே நகர்ந்து போயிடுவார் :
ஆனாலும் இனி அவருக்கு இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைக்காது என்பதே நிரந்தரமான உண்மை. இதன் காரணமாக தற்போது அடுத்த அவதாரத்தை எடுத்துள்ள புஜாரா இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இந்த ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார்.
அப்படி இந்த இந்தியா ஆஸ்திரேலியா தொடரை வர்ணனை செய்து வரும் அவரது செயல்பாடு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. ஏனெனில் போட்டியின் போது ஆஸ்திரேலிய நாட்டில் இருக்கும் பிட்ச்கள், போட்டியின்போது இரு அணியின் வீரர்கள் செய்யும் தவறுகள் மற்றும் அவரது கணிப்பு என அனைத்துமே மிகச் சரியாக உள்ளது. இதன் காரணமாக அவரது வர்ணனைக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமும் உருவாகியுள்ளது.
இந்நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடும் போது வார்னருடன் தனக்கு ஏற்பட்ட சம்பவம் ஒன்று குறித்து பேசியுள்ள அவரது வர்ணனை தற்போது படு வைரலாகி வருகிறது. அந்த வகையில் ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரரான டேவிட் வார்னர் எப்போது பேட்டிங் செய்ய வந்தாலும் தன்னை திரும்பி பார்க்க மாட்டார் என்றும் அவ்வாறு பார்க்கும் போது நான் அவரை ஸ்லெட்ஜிங் செய்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : டேவிட் வார்னருக்கு எப்போதுமே ஆப் ஸ்பின்னர்களை கணிப்பதில் ஒரு சிக்கல் இருக்கிறது. டேவிட் வார்னரின் வீக்னஸை நான் நன்கு அறிவேன். எப்போதெல்லாம் அவர் பேட்டிங் செய்ய வருகிறாரோ அப்போதெல்லாம் அஸ்வினுக்கு எதிரான அவரது ஸ்டேட்டுகளை அவருக்கு நினைவு படுத்துவேன். அதோடு அவர் எப்படி எல்லாம் விக்கெட்டை இழந்துள்ளார் என்பதை பற்றியும் பேசுவேன். அப்படி நான் பேசும்போது நான் கூறிய விடயங்கள் அவர்களது தலைக்குள் ஓடிக்கொண்டே இருக்கும். உடனே அவர் விரைவில் ஆட்டமிழந்து விடுவார்.
இதையும் படிங்க : இதுக்கு அவங்க இங்கயே இருந்திருக்கலாம்.. பாதி தொடரில் இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட 3 இந்திய வீரர்கள் – காரணம் என்ன?
ஒவ்வொரு முறையும் நான் வார்னருடன் விளையாடும்போது அவரை ஸ்லெட்ஜிங் செய்ய தவறியதில்லை. அவருக்கு அருகில் பீல்டிங் செய்து கொண்டு அவரை ஸ்லெட்ஜிங் செய்து கொண்டிருப்பேன். அதனால் வார்னர் என்னை பார்த்த உடனே அவர் நகர்ந்து சென்று விடுவார் என்று சுவாரஸ்யமான சில தகவல்களை புஜாரா அளித்துள்ளார். அவர் கூறியது போலவே ரவிச்சந்திரன் அஸ்வின் வார்னரின் விக்கெட்டை டெஸ்ட் கிரிக்கெட்டில் பத்து முறை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.



