ஆசையா மேட்ச் பாக்கலானு வந்தா இப்படியா பண்ணுவீங்க.. ஒளிபரப்பினால் ஏற்பட்ட சிக்கல் – கடுப்பாகிய ரசிகர்கள்

Inglis
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று முடிந்த 50 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் தொடருக்கு பின்னர் அடுத்த 4 நாட்களிலேயே இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது துவங்கியுள்ளது. இந்த தொடரின் முதலாவது டி20 போட்டியானது இன்று ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நவம்பர் 23-ஆம் தேதி விசாகப்பட்டினம் மைதானத்தில் துவங்கியது.

இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் இந்திய அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்தார். அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணியானது இந்திய அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் குவித்தது.

- Advertisement -

பின்னர் 209 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி தங்களது இன்னிங்க்ஸை விளையாடி வருகிறது. இந்நிலையில் ஏற்கனவே 50 ஓவர் உலகக் கோப்பை தொடரினை இழந்த வருத்தத்தில் இருக்கும் ரசிகர்கள் டி20 போட்டிகளையாவது நிம்மதியாக பார்க்கலாம் என்று போட்டியை ரசிக்க தொடங்கினர்.

அதேபோன்று போட்டி ஆரம்பித்த சில ஓவர்கள் எந்தவொரு தடையுமின்றி இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை சிறப்பாக கட்டுப்படுத்தி குறைவான அளவில் ரன்களை வழங்கி அவர்களை கட்டுக்குள் வைத்து வந்தது.

- Advertisement -

ஆனால் அதன்பிறகு போட்டி சுவாரசியமான கட்டத்திற்கு நகரும்போது திடீரென இந்த போட்டி ஒளிபரப்பாவது நின்று போனது. இதன் காரணமாக ரசிகர்கள் ஜியோ சினிமா செயலியை மீண்டும் மீண்டும் திறந்து பார்க்க போட்டி ஒளிபரப்பாகாமல் அப்படியே நின்றது. இதனால் இணையத்தில் தான் ஏதோ பிரச்சனை என்று ரசிகர்கள் நினைத்து மீண்டும் அந்த ஆப்பை அப்டேட் செய்ய நினைக்கையில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்று காண்பித்தது.

இதையும் படிங்க : ஈரம் காய்வதற்குள் அடித்து நொறுக்கிய ஆஸி.. இந்தியாவுக்கு எதிராக ஜோஸ் இங்லிஷ் மாஸ் சாதனை

இதனால் ஒருசில ஓவர்கள் வரை நேரடி ஒளிபரப்பு ஆகாமலே இருந்தது. இதனால் ரசிகர்கள் வருத்தம் அடைந்து ஏற்கனவே உலகக்கோப்பை தொடரினை எந்தவொரு பிரச்சனையும் இன்றி ஹாட் ஸ்டாரில் கண்டு களித்தோம். ஆனால் இன்று ஜியோ சினிமாவில் இப்படி ஒரு பிரச்சனை எழுவது ஏன்? என்று கொந்தளித்து தங்களது விமர்சனங்களையும் சமூக வலைதளத்தின் மூலம் முன்வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement