ஈரம் காய்வதற்குள் அடித்து நொறுக்கிய ஆஸி.. இந்தியாவுக்கு எதிராக ஜோஸ் இங்லிஷ் மாஸ் சாதனை

Josh Inglis
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 தொடரில் தோல்வியை பரிசளித்த ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மீண்டும் சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியா விளையாடுகிறது. 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் பயணமாக நடைபெறும் இத்தொடரில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு சூரியகுமார் யாதவ் தலைமையில் இளம் இந்திய அணி களமிறங்கியுள்ளது.

அந்த நிலைமையில் நவம்பர் 23ஆம் தேதி இரவு 7 மணிக்கு விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இத்தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு கேப்டன் மேத்யூ வேட் ஆரம்பத்திலேயே 13 (11) ரன்களில் ரவி பிஷ்னோய் சுழலில் போல்டானர். ஆனால் மறுபுறம் முதல் முறையாக துவக்க வீரராக களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் நிதானமாக விளையாடிய நிலையில் அடுத்ததாக வந்த ஜோஸ் இங்லிஷ் அடித்து நொறுக்கினார்.

- Advertisement -

குறிப்பாக மிடில் ஓவர்களில் இந்திய பவுலர்களை பந்தாடிய இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 130 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஒவ்வொரு ஓவருக்கும் 10க்கும் மேற்பட்ட ரன்களை விளாசி ஆஸ்திரேலியாவை வலுப்படுத்திய போது ஸ்டீவ் ஸ்மித் 52 (41) ரன்களில் அவுட்டானார். ஆனால் மறுபுறம் இந்திய பவுலர்களை தொடர்ந்து வெறித்தனமாக அடித்து நொறுக்கிய ஜோஸ் இங்கிலீஷ் 47 பந்துகளில் சதமடித்து 11 பவுண்டர் 8 சிக்ஸருடன் 110 (50) ரன்களை 220 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்து வாங்கி ஆட்டமிழந்தார்.

குறிப்பாக 47 பந்துகளில் 100 ரன்கள் தொட்ட அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக அதிவேகமாக சதம் அடித்த ஆஸ்திரேலியா வீரர் என்ற சாதனையையும் படைத்தார். இதற்கு முன் கடந்த 2019ஆம் ஆண்டு பெங்களூருவில் நடைபெற்ற போட்டியில் இந்தியாவுக்கு எதிராக கிளன் மேக்ஸ்வெல் 50 பந்துகளில் சதம் அடித்ததே முந்தைய சாதனையாகும்.

- Advertisement -

இறுதியில் மார்கஸ் ஸ்டோனிஸ் 7*, டிம் டேவிட் அதிரடியாக 19* ரன்கள் எடுத்ததால் 20 ஓவர்களில் ஆஸ்திரேலியா 208/3 ரன்கள் குவித்து மிரட்டியது. குறிப்பாக உலகக்கோப்பை ஃபைனலில் தோல்வியை சந்தித்ததால் சோகத்தில் ஆழ்ந்த இந்திய ரசிகர்கள் கண்களில் ஈரம் காய்வதற்குள் மீண்டும் அந்த அணி இந்திய அணியை இப்போட்டியில் அடித்து நொறுக்கி பெரிய ஸ்கோர் குவித்துள்ளது.

இதையும் படிங்க: ஈரம் காய்வதற்குள் அடித்து நொறுக்கிய ஆஸி.. இந்தியாவுக்கு எதிராக ஜோஸ் இங்லிஷ் மாஸ் சாதனை

மறுபுறம் பந்து வீச்சில் சுமாராகவே செயல்பட்ட இந்தியா சார்பில் அதிகபட்சமாக பிரசித் கிருஷ்ணா மற்றும் ரவி பிஷ்னோய் தலா 1 விக்கெட் எடுத்தனர். இதைத்தொடர்ந்து 209 ரன்களை எடுத்து இப்போட்டியிலாவது வென்று ஓரளவு தங்களுடைய மானத்தை தக்க வைப்பதற்காக இந்திய பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்து வருகிறார்கள்.

Advertisement