- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்தியா ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டிகளை எந்த சேனலில் பாக்கலாம்? – எத்தனை மணிக்கு போட்டி நடைபெறும்?

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது நாளை அக்டோபர் 19-ஆம் தேதி பெர்த் மைதானத்தில் துவங்க இருக்கிறது. இந்த போட்டிக்காக தற்போது இரு அணி வீரர்களும் பெர்த் மைதானத்தில் தீவிர வலைப்பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். நீண்ட இடைவெளிக்கு பின்னர் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் விளையாடுவதால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

முதல் ஒருநாள் போட்டியை எந்த சேனலில் பார்க்கலாம்? :

இந்நிலையில் எதிர்வரும் இந்த இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரை எந்த தொலைக்காட்சியில் பார்க்கலாம்? போட்டிகள் எத்தனை மணிக்கு துவங்கும் என்பது குறித்த சில முக்கிய தகவல்களை நாங்கள் இங்கே உங்களுக்காக பிரத்தியேகமாக தொகுத்து வழங்கியுள்ளோம்.

- Advertisement -

அந்த வகையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இந்த முதலாவது ஒருநாள் போட்டியானது நாளை அக்டோபர் 19-ஆம் தேதி பெர்த் மைதானத்தில் துவங்க இருக்கிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு துவங்கும்.

இந்த ஒருநாள் தொடரை பொறுத்தவரை அதன் ஒளிபரப்பு உரிமத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளதால் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழும சேனல்களில் இந்த தொடரை கண்டுகளிக்கலாம். அதேபோன்று ஆன் லைன் வாயிலாக போட்டியை கண்டுகளிக்க விரும்பவோர் ஜியோ ஹாட்ஸ்டார் செயலின் மூலம் கண்டு களிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

நாளை முதலாவது போட்டி நடைபெற இருக்கும் பெர்த் மைதானத்தின் சார்பில் வெளியான வானிலை அறிக்கைபடி போட்டி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புகள் குறைவு என்பதனால் எந்த ஒரு சிக்கலும் இன்றி போட்டி முழுவதுமாக நடைபெற்று முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : ஸ்ரீகாந்த்தை திட்டி ஈகோவை காட்டாம.. முடிஞ்சா இந்தியாவுக்காக ஜெய்ச்சு காட்டுங்க.. கம்பீரை சாடிய சந்து

ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதன் பின்னர் சுப்மன் கில் புதிய ஒருநாள் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள வேளையில் இந்த முதல் போட்டியில் இந்திய அணி எவ்வாறு செயல்படும்? என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -