ஸ்ரீகாந்த்தை திட்டி ஈகோவை காட்டாம.. முடிஞ்சா இந்தியாவுக்காக ஜெய்ச்சு காட்டுங்க.. கம்பீரை சாடிய சந்து

Balwinder Sandhu
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் ஓய்வுக்குப் பின் யூடியூப் பக்கத்தில் தம்முடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார். 1983 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் அதிகபட்ச ஸ்கோர் அடித்த அவர் இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார். ஓய்வுக்குப் பின் வர்ணனையாளராக செயல்பட்ட அவர் 2011 உலகக்கோப்பை வென்ற தோனி தலைமையிலான இந்திய அணியை தேர்ந்தெடுத்த தேர்வுக்குழு தலைவர் என்ற பெருமைக்குரியவர்.

அப்படிப்பட்ட அவர் தற்போதைய இந்திய அணியில் ஹர்ஷித் ராணா எதற்காக தேர்வு செய்யப்படுகிறார்? என்பது யாருக்கும் தெரியவில்லை என்று சமீபத்தில் விமர்சித்திருந்தார். உண்மையில் அந்தக் கருத்து பெரும்பாலான ரசிகர்களின் மனதில் இருக்கும் கேள்வியாகும். அதைச் சொன்னதற்கு என்னை என்ன வேண்டுமானாலும் விமர்சியுங்கள், ஆனால் 23 வயது குழந்தையை விமர்சிப்பது வெட்கக்கேடானது என்று ஸ்ரீகாந்துக்கு பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பதிலடி கொடுத்தார்.

- Advertisement -

ஸ்ரீகாந்த் விமர்சனம்:

அத்துடன் யூடியூப் சேனல் நலனுக்காக இப்படி பேசுவது நியாயமற்றது என்றும் கம்பீர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவருக்கு 1983 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியின் முன்னாள் வீரர் பல்வீந்தர் சந்து கொடுத்துள்ள பதிலடி பின்வருமாறு. “ஒருவர் சொல்லும் கருத்தை நீங்கள் ஏற்றுக்கொள்ளலாம் அல்லது மறுக்கலாம். ஆனால் பொதுவெளியில் அவரைத் திட்ட எந்த காரணமும் இல்லை”

“ஸ்ரீகாந்த் தனது அதிரடியான பேட்டிங்கை போலவே வெளிப்படையப் பேசும் ஸ்டைலைக் கொண்டவர். அதனாலேயே நாங்கள் அவரை விரும்புகிறோம். முன்னாள் வீரர்கள் குறிப்பிட்ட வீரரை சமூக வலைதளங்களில் கிண்டலடிக்கக்கூடாது என்பது உண்மையானது. ஆனால் அது இந்தியாவுக்காக ஆர்வத்துடன் பணியாற்றிய ஒருவர் கிரிக்கெட்டைப் பற்றி பேசுவதற்கான உரிமையைப் பறிக்காது”

- Advertisement -

ஈகோவை காட்டத்திங்க:

“முன்னாள் வீரர்களின் கருத்துக்களை நீங்கள் திறந்த மனதுடன் மரியாதையுடன் ஊக்கமாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு தலைமைப் பயிற்சியாளராக போட்டியில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தக்கூடாது. ஸ்ரீகாந்த் தெரிவித்த கருத்துகளைப் பற்றி பொதுவெளியில் கௌதம் கம்பீர் திட்டி கடுமையாகப் பேசியதைப் பார்த்து நான் வேதனையடைகிறேன்”

இதையும் படிங்க: க்ரேட் சேஸர் விராட், ரோஹித்தை என்ஜாய் பண்ணுங்க.. ஆனா அவங்க அடிக்கக்கூடாது.. மார்ஷ் கலகலப்பு பேட்டி

“விளையாட்டு உலகத்தில் பயிற்சியாளர் பொறுப்பேற்ற நீங்கள் ஒட்டுமொத்த சமூகத்தின் பிரதிநிதியாக கருதப்படுவீர்கள். அந்த வேலையில் நீங்கள் பொறுப்பு மற்றும் கண்ணியத்துடன் இருக்க வேண்டுமே தவிர சொந்த ஈகோவை காட்டக்கூடாது. இதற்கு முன் அந்த வேலையில் இருந்தவரைப் பார்த்து நீங்கள் அமைதியுடன் கவனமாக செயல்படுவதை கற்றுக்கொள்ள வேண்டும். அண்டர்-19 அளவில் நான் கம்பீருக்கு பயிற்சியாளராக இருந்துள்ளேன். நீங்கள் பெரிய தொடர்களை வெல்வதில் கவனம் செலுத்துங்கள். அதுவே விமர்சனங்களை அமைதியாக்குவதற்கான சிறந்த வழி. எப்பேர்பட்ட விமர்சனங்களை எதிர்கொள்வதும் பயிற்சியாளரின் வேலைகளில் ஒன்று” என்று கூறினார்.

Advertisement