IND vs AUS : நாளைய முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச பட்டியல் இதோ

IND-vs-AUS
- Advertisement -

இலங்கையில் அண்மையில் நடைபெற்று முடிந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணி அடுத்ததாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது செப்டம்பர் 22-ஆம் தேதி நாளை துவங்கி செப்டம்பர் 27-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, ஹார்டிக் பாண்டியா, முகமது ஷமி, குல்தீப் யாதவ் போன்ற முக்கிய வீரர்களுக்கு ஓய்வழிக்கப்பட்டுள்ளதால் கே.எல் ராகுல் தலைமையிலான இந்திய அணியே முதல் இரண்டு போட்டிகளிலும் பங்கேற்று விளையாட இருக்கிறது.

- Advertisement -

மூன்றாவது போட்டிக்கான இந்திய அணியில் முன்னணி வீரர்கள் மீண்டும் இடம் பெறுவதால் இந்த முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணியில் இடம் பிடிக்கப்போகும் வீரர்கள் யார்? யார்? என்பது குறித்து எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது.

அந்த வகையில் நாளை செப்டம்பர் 22-ஆம் தேதி மொகாலி நகரில் நடைபெறவுள்ள முதலாவது ஒருநாள் போட்டியில் எந்தெந்த வீரர்களுக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்கும் என்பது குறித்த உத்தேச பட்டியலை நாங்கள் உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம். அதன்படி நாளைய முதலாவது ஒருநாள் போட்டியில் துவக்க வீரர்களாக சுப்மன் கில் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் இடம்பிடிப்பார்கள். அதோடு மூன்றாவது இடத்தில் ஷ்ரேயாஸ் ஐயரும், நான்காவது இடத்தில் திலக் வர்மாவும், ஐந்தாவது இடத்தில் கே.எல் ராகுலும் விளையாட வாய்ப்புள்ளது.

- Advertisement -

அதேபோன்று ஆறாவது இடத்தில் சூரியகுமார் யாதவும், சுழற்பந்து வீச்சாளர்களாக ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் விளையாட அதிக வாய்ப்புள்ளது. மேலும் வேகப்பந்து வீச்சாளர்களாக ஷர்துல் தாகூர், பும்ரா மற்றும் சிராஜ் ஆகியோர் இடம் பெறவும் அதிக வாய்ப்பு உள்ளது. அதன்படி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : அஸ்வினால் அது முடியாது.. ஆஸி தொடரில் அசத்தலைன்னா வருங்காலத்தை வீணடிக்கமா ட்ராப் பண்ணுங்க – அமித் மிஸ்ரா அதிரடி

1) சுப்மன் கில், 2) இஷான் கிஷன், 3) ஷ்ரேயாஸ் ஐயர், 4) திலக் வர்மா, 5) கே.எல் ராகுல், 6) சூரியகுமார் யாதவ், 7) ரவீந்திர ஜடேஜா, 8) அஷ்வின், 9) ஷர்துல் தாகூர், 10) பும்ரா, 11) முகமது சிராஜ்.

Advertisement