
ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் பும்ரா தலைமையில் வென்ற இந்தியா ரோஹித் சர்மா தலைமையில் அடுத்தடுத்த போட்டிகளில் தோல்விகளை சந்தித்தது. அதனால் 2 – 1* என்ற கணத்தில் பின்தங்கியுள்ள இந்தியா 2014க்குப்பின் பார்டர் – கவாஸ்கர் கோப்பையை வெல்ல முடியாமல் நழுவ விட்டுள்ளது.
அதன் காரணமாக குறைந்தபட்சம் கோப்பையை தக்க வைத்துக் கொள்ள இந்தியா கடைசி போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு தகுதி பெற எஞ்சியுள்ள அறைகுறை வாய்ப்பையும் தக்க வைத்துக்கொள்ளவும் 5வது போட்டியை இந்தியா வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அதனால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்போட்டி ஜனவரி 3ஆம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 5:00 மணிக்கு சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் துவங்குகிறது.
நூற்றாண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட்டை நடத்தி வரும் இந்த அழகான மைதானம் இந்தியாவுக்கு ராசியற்றது என்று சொல்ல வேண்டும். ஏனெனில் 1947 முதல் இங்கே இந்தியா 13 போட்டிகளில் விளையாடியுள்ளது. ஆனால் அதில் 1978ஆம் ஆண்டு முதலும் கடைசியாக ஒரே ஒரு வெற்றியை இந்தியா பெற்றது. மற்றபடி 5 தோல்விகளை சந்தித்துள்ள இந்தியா 7 டிராவை பதிவு செய்துள்ளது.
சிட்னி நகரில் இப்போட்டியின் முதல் 4 நாட்களில் மழை பெய்வதற்கு வாய்ப்பு இல்லை என்று தெரிய வருகிறது. ஆனால் கடைசி நாளில் 90% மழை பொழிவதற்கு வாய்ப்புள்ளதாக அங்குள்ள வானிலை மையம் தெரிவிக்கிறது. இருப்பினும் இந்தப் போட்டி முடிவு கிடைக்கும் அளவுக்கு.நடைபெறும் என்று நம்பலாம்.
சிட்னி மைதானம் ஆரம்ப நாட்களில் பேட்ஸ்மேன்களுக்கு அதிக உதவியை கொடுக்கும் மைதானமாக அறியப்படுகிறது. எனவே இங்கு சூழ்நிலையை உணர்ந்து நங்கூரமாக விளையாடினால் பேட்ஸ்மேன்கள் சதம், இரட்டை சதம் போன்ற பெரிய ரன்களை குவிக்கலாம். அதே போல நாட்கள் செல்லச் செல்ல ஸ்பின்னர்கள் இங்கே தாக்கத்தை ஏற்படுத்துவார்கள்.
இதையும் படிங்க: சிட்னி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச பட்டியல் இதோ
துல்லியமாக பந்து வீசும் வேகம் பந்து வீச்சாளர்களுக்கு அனைத்து நாட்களிலும் விக்கெட்டுகள் கிடைக்காமல் இருக்காது. 318, 311, 249, 169 என்பது இந்த மைதானத்தில் சராசரி நான்கு இன்னிங்ஸ்களின் ஸ்கோர் ஆகும். இங்கு 47 முறை முதலில் பேட்டிங் செய்த அணிகளும் 43 முறை 2வதாக பேட்டிங் செய்த அணிகளும் வென்றுள்ளன. எனவே இந்த போட்டியில் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்