சிட்னி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச பட்டியல் இதோ

IND-vs-AUS
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது ஜனவரி 3-ஆம் தேதி சிட்னி நகரில் துவங்குகிறது. ஏற்கனவே இந்த தொடரில் நடைபெற்று முடிந்த 4 போட்டிகளில் முடிவில் ஆஸ்திரேலிய அணியானது இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை வகித்துள்ளது.

இந்திய அணியின் பிளேயிங் லெவன் பட்டியல் :

இதன் காரணமாக கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே இந்த தொடரை சமன் செய்யும் என்ற நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக சிட்னி நகருக்கு சென்றடைந்துள்ள இந்திய வீரர்கள் தற்போது தீவிர வலைப்பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் லெவனில் சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

ஏனெனில் ஏற்கனவே இந்த தொடரை கிட்டத்தட்ட இழக்கும் அபாயத்தில் உள்ள இந்திய அணி கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமன் செய்யும் என்ற நிலை இருக்கிறது. இதனால் நிச்சயம் இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கலாம் என்று தெரிகிறது.

ஆனாலும் இந்திய அணியின் பிளேயிங் லெவனை எப்போதும் கௌதம் கம்பீர் மாற்ற விரும்ப மாட்டார் என்பதனால் அணியில் ஒரு சில மாற்றங்கள் மட்டுமே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இந்த கடைசி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் துவக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல் ராகுல் ஆகியோர் களமிறங்குவார்கள் என்று தெரிகிறது. அதேபோன்று மூன்றாவது இடத்தில் மீண்டும் சுப்மன் கில்லும், நான்காவது இடத்தில் விராட் கோலியும் விளையாடுவார்கள் என்று தெரிகிறது.

- Advertisement -

ஐந்தாவது மற்றும் ஆறாவது இடத்தில் ரிஷப் பண்ட் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் விளையாடுவார்கள். 7,8 ஆகிய இடங்களில் நிதீஷ் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் விளையாடுவார்கள். மீதமுள்ள வேகப்பந்து வீச்சாளர்களுக்கான இடத்தில் ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா அல்லது ஹர்ஷித் ராணா விளையாட வாய்ப்புள்ளது. அதன்படி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்தாவது போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : அந்த 3 பசங்களை பாருங்க.. மாற்றம் ஆரம்பம்.. இதை செய்யலன்னா டீம்ல இடமில்லை.. எச்சரித்த கம்பீர்

1) யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 2) கே.எல் ராகுல், 3) சுப்மன் கில், 4) விராட் கோலி, 5) ரிஷப் பண்ட், 6) ரோஹித் சர்மா, 7) ரவீந்திர ஜடேஜா, 8) நிதீஷ் ரெட்டி, 9) ஹர்ஷித் ராணா/பிரசித் கிருஷ்ணா, 10) ஜஸ்ப்ரீத் பும்ரா, 11) முகமது சிராஜ்.

Advertisement