IND vs AUS : ஆஸியின் கோட்டை.. முதல் ஒன்டே நடைபெறும் மொஹாலி மைதானம் எப்படி? வரலாற்று புள்ளிவிவரம்.. பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

Mohali Cricket Ground Stadium
- Advertisement -

ஆசிய கோப்பையை வென்று தாயகம் திரும்பிய இந்திய அணி அடுத்ததாக 2023 உலகக்கோப்பையில் களமிறங்குவதற்கு முன்பாக இறுதிக்கட்டமாக தயாராகும் வகையில் வலுவான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. அதில் முதலிரண்டு போட்டிகளில் ரோகித் சர்மா போன்ற சீனியர்கள் ஓய்வெடுக்கும் நிலையில் கேஎல் ராகுல் தற்காலிக கேப்டனாக செயல்பட உள்ளார். அவரது தலைமையில் சூரியகுமார் யாதவ் போன்ற தடுமாற்றமாக செயல்படும் எஞ்சியுள்ள வீரர்கள் ஃபார்முக்கு திரும்புவதற்காக இத்தொடரில் களமிறங்கும் வாய்ப்பை பெற உள்ளனர்.

மேலும் ரவிச்சந்திரன் அஸ்வின் நீண்ட நாட்கள் கழித்து இத்தொடரில் தேர்வாகியுள்ளார். அதனால் ஆசிய கோப்பைக்கு பின்பும் இருக்கும் ஓரிரு குறைகளையும் பலவீனங்களையும் இத்தொடரில் சிறப்பாக செயல்பட்டு சரி செய்வதற்கு இந்திய அணியினர் முயற்சிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல கேப்டன் கமின்ஸ், ஸ்மித், மேக்ஸ்வேல் போன்ற முக்கிய வீரர்கள் காயத்திலிருந்து குணமடைந்து என்பதால் இத்தொடரில் ஆஸ்திரேலியா பெரிய சவாலை கொடுக்கும் என்று உறுதியாக நம்பலாம்.

- Advertisement -

மொஹாலி மைதானம்:
அதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்தொடரின் முதல் போட்டி செப்டம்பர் 22ஆம் தேதி மதியம் 1.30 மணிக்கு பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் இருக்கும் பிசிஏ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. கடந்த 1993இல் தோற்றுவிக்கப்பட்டு 27000 ரசிகர்கள் அமரும் வகையில் நவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ள இம்மைதானத்தில் 25 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளன.

1.இங்கு 16 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 10 வெற்றிகளையும் 6 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது. குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 1இல் மட்டுமே வென்றுள்ளது. 4 வெற்றிகளை பதிவு செய்துள்ள ஆஸ்திரேலியாவுக்கு இது ராசியான மைதானமாக இருக்கிறது.

- Advertisement -

2. இந்த மைதானத்தில் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் (410 ரன்கள்) மற்றும் அதிகபட்ச ஸ்கோர் (208) பதிவு செய்த வீரராக ரோகித் சர்மா சாதனை படைத்துள்ளார். அதே போல இங்கு அதிக விக்கெட்களை (11) எடுத்த பவுலராக ஹர்பஜன் சிங் முதலிடத்தில் இருக்கிறார். இங்கு இந்தியா பதிவு செய்துள்ள அதிகபட்ச ஸ்கோர் : 392/4, இலங்கைக்கு எதிராக, 2017

வெதர் ரிப்போர்ட்:
இப்போட்டி நடைபெறும் மொஹாலி நகரில் போட்டி நாளன்று லேசான மேகமூட்டத்துடன் கூடிய வறண்ட வானிலை நிலவும் என்று இந்திய வானிலை மையம் தெரிவிக்கிறது. அதனால் இப்போட்டி முழுமையாக நடைபெறும் என்று உறுதியாக நம்பலாம்.

- Advertisement -

பிட்ச் ரிப்போர்ட்:
மொஹாலி மைதானம் எப்போதுமே பேட்ஸ்மேன்கள் ராஜாங்கம் நடத்தும் இடமாக இருந்து வருகிறது. சொல்லப்போனால் கடைசியாக இங்கு நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இந்தியா நிர்ணயித்த 359 ரன்களை ஆஸ்திரேலியா அசால்டாக சேசிங் செய்து வென்றது. இருப்பினும் புதிய பந்தை ஸ்விங் செய்து வேகப்பந்து வீச்சாளர்கள் வழக்கமான தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்று நம்பலாம்.

இதையும் படிங்க: IND vs AUS : நாளைய முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச பட்டியல் இதோ

அதே போல போட்டி நடைபெற நடைபெற மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்கள் விக்கெட்களை எடுத்து சவாலை கொடுப்பார்கள். மேலும் வரலாற்றில் இங்கு நடைபெற்ற போட்டிகளில் 15 முறை முதலில் பேட்டிங் செய்த அணியும் 10 முறை சேசிங் செய்த அணியும் வென்றுள்ளன. எனவே டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங் செய்து பெரிய ரன்கள் குவிப்பது வெற்றிக்கு வித்திடலாம்.

Advertisement