ஒருவருடம் கழித்து பங்களாதேஷ் அணிக்கு சரியான பாடம் கற்பித்த – இந்திய அண்டர் 19 படை

U-19-2
- Advertisement -

வெஸ்ட்இண்டீஸ் நாட்டில் முதல் முறையாக நடைபெற்றுவரும் ஐசிசி அண்டர் 19 உலககோப்பை தொடர் மிகவும் விறுவிறுப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. வரலாற்றில் 14வது முறையாக நடைபெறும் இந்த தொடர் கடந்த ஜனவரி 14-ஆம் தேதி அன்று துவங்கியது. இதில் நடப்புச் சாம்பியன் வங்கதேசம், முன்னாள் சாம்பியன் இந்தியா உட்பட உலகின் டாப் 16 அணிகள் லீக் சுற்று, நாக்அவுட் சுற்று உட்பட மொத்தம் 48 போட்டிகளில் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

u 19

- Advertisement -

காலிறுதி சுற்று :
வெஸ்ட்இண்டீஸ் நாட்டின் பல்வேறு முக்கிய மைதானங்களில் கடந்த 2 வாரங்களாக நடைபெற்று வந்த இந்த உலக கோப்பையில் லீக் சுற்று போட்டிகள் முடிந்து நாக்அவுட் சுற்று போட்டிகள் தொடங்கியுள்ளன. இந்த உலக கோப்பையில் இந்திய அணி தனது லீக் சுற்றில் தென் ஆப்பிரிக்கா, அயர்லாந்து மற்றும் உகாண்டா ஆகிய 3 அணிகளை எதிர்கொண்டது.

இந்த 3 போட்டிகளிலும் அபார வெற்றி பெற்ற இந்தியா ஹாட்ரிக் வெற்றியுடன் காலிறுதி சுற்றுக்குத் தகுதி பெற்று அசத்தியது. இதையடுத்து நேற்று நடைபெற்ற காலிறுதி சுற்றின் 2வது போட்டியில் நடப்பு சாம்பியன் வங்கதேசத்தை இந்தியா எதிர்கொண்டது.

u 19

இந்தியா அபாரம்:
ஆன்டிகுவா நகரிலுள்ள கூலிட்ஜ் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி நேற்று மாலை 6.30 மணிக்கு துவங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற “யாஷ் துள்” தலைமையிலான இந்திய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதை அடுத்து களமிறங்கிய வங்கதேசம் இந்தியாவின் துல்லியம் மிகுந்த அதிரடியான பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஆரம்பத்திலேயே திண்டாட துவங்கியது.

- Advertisement -

குறிப்பாக அந்த அணியின் முதல் 3 பேட்டர்களை இந்தியாவின் இளம் வேகப்பந்து வீச்சாளர் “ரவிக்குமார்” தனது அபார பந்துவீச்சால் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து அவுட்டாக்கி துவக்கத்திலேயே போட்டியை இந்தியாவின் பக்கம் திருப்பினார். இதனால் 14/3 என மோசமான தொடக்கம் பெற்ற வங்கதேசம் இறுதிவரை அதிலிருந்து மீளமுடியாமல் தவித்தது.

u 19 1

பழிவாங்கிய இந்தியா :
அடுத்து வந்த வீரர்களையும் இந்திய பவுலர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் அவுட் செய்ததால் 37.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த வங்கதேசம் வெறும் 111 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணிக்கு அதிகபட்சமாக மெஹிராப் 30 ரன்கள் எடுத்தார். இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவி குமார் 3 விக்கெட்டுகளையும், விக்கி ஒஸ்த்வால் 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

- Advertisement -

இதை அடுத்து 112 என்ற எளிய இலக்கை துரத்திய இந்தியாவிற்கு தொடக்க வீரர் ஹர்னூர்சிங் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். இருப்பினும் மற்றொரு தொடக்க வீரர் அங்கிரிஸ் ரகுவன்ஷி 44 ரன்களும், ஷைக் ரசீத் 26 ரன்களும், கேப்டன் யாஷ் துள் 20* ரன்களும் எடுக்க 30.5 ஓவர்களில் இந்தியா 117/5 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

dhull

வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக ரிப்போன் மான்டல் 4 விக்கெட்டுகள் எடுத்த போதிலும் அது நடப்பு சாம்பியன் வங்கதேசத்தின் வெற்றிக்கு பங்காற்றவில்லை. இந்த வெற்றிக்கு 3 விக்கெட்டுகள் எடுத்து வித்திட்ட இந்தியாவின் ரவிக்குமார் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்த வெற்றியின் வாயிலாக கடந்த 2020 ஆம் ஆண்டு அண்டர் 19 உலகக்கோப்பை தோல்விக்கு வங்கதேசத்தை இந்தியா பழிதீர்த்துக் கொண்டது. ஆம் கடந்த 2018இல் பிரிதிவி ஷா தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்தில் நடந்த அண்டர் 19 உலகக்கோப்பையை வென்று சாம்பியனாக இருந்தது.

- Advertisement -

அதன்பின் கடந்த 2020ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த அண்டர் 19 உலகக்கோப்பையில் இறுதிப் போட்டி வரை முன்னேறிய இந்தியாவை தோற்கடித்த வங்கதேசம் முதல் முறையாக கோப்பையை வென்றது. ஆனால் அந்த உலகக்கோப்பை பைனல் போட்டியில் இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக மோதிகொண்டனர். இறுதியில் போட்டியின் முடிவில் ஏற்பட்ட வெற்றியின் கர்வத்தால் ஒருசில வங்கதேச வீரர்கள் இந்திய வீரர்களுடன் கடும் சண்டையில் ஈடுபட்டனர். தற்போது அந்த தோல்விக்கு வங்கதேசத்தை இந்தியா பழிதீர்த்து கொண்டுள்ளது.

இதையும் படிங்க : தோனியை நேரில் சந்தித்து ஆட்டோகிராப் வாங்கி ஐ.பி.எல் ஏலத்தில் கலந்துகொள்ளும் இந்த வீரர் – யார் தெரியுமா?

அரை இறுதியில் வெல்லுமா :
இதை அடுத்து இந்த உலக கோப்பையின் அரையிறுதி சுற்றில் நடைபெறும் 2வது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை இந்தியா எதிர்கொள்ள உள்ளது. இப்போட்டி வரும் பிப்ரவரி 2ஆம் தேதி இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு ஆண்டிகுவா நகரில் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேறுமா என இப்போட்டிக்காக இந்திய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Advertisement