டி20 உலககோப்பைக்கு முன்னர் மேலும் 2 டி20 தொடர்கள். பி.சி.சி.ஐ பிளான் – செம பிளான் தான்

IND
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இன்று (மார்ச் 20) நடக்க இருக்கும் 5 ஆவது டி20 ஆட்டத்துடன் இந்த டி20 தொடர் நிறைவடைகிறது. அதன் பின்னர் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடக்க இருக்கிறது. அது முடிந்ததும் ஐபிஎல் தொடர் ஏப்ரல் 9ஆம் தேதி முதல் மே மாதம் 30ம் தேதி வரை நடக்க இருக்கிறது. ஐபிஎல் தொடர் நடந்து முடிந்தவுடன் இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.

INDvsENG

- Advertisement -

டெஸ்ட் சாம்பியன்ஷிப் காண இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியுடன் களமிறங்க இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும். அது முடிந்தவுடன் ஆசிய கோப்பை நடக்கப் போவதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் அதுபற்றிய இறுதி தகவல் இன்னும் வெளிவராத நிலையில் தற்பொழுது பிசிசிஐ அந்த இடைக்காலத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுடன் டி20 தொடரை நடத்த திட்டமிட்டுள்ளது.

இதுவரையில் ஜூலை மாதம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி தொடர் முடிவடைந்ததும் , ஆசிய கோப்பை தொடர் நடக்கும், பின்னர் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் உலக கோப்பை டி20 தொடர் நடக்குமென்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது . இந்நிலையில் ஆசிய கோப்பை நடக்குமா நடக்காதா என்பது பற்றி கேள்விகள் எழுந்துள்ள நிலையில் , பிசிசிஐ இந்திய அணிக்கு டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னர் தென்னாபிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் உடன் டி20 தொடர் நடத்த திட்டமிட்டுள்ளது.

Sundar-1

உலக கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாட இந்த 2 டி20 தொடர் கைகொடுக்கும் என்பதன் அடிப்படையில் இந்த திட்டம் நடத்தப்பட இருப்பதாக பிசிசி அணியின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். மேலும் சென்ற ஆண்டு தென்னாப்பிரிக்கா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் கொரோனா அச்சம் காரணமாக கைவிடப்பட்டது.

IndvsRsa

எனவே சென்ற ஆண்டு நடக்காத ஒருநாள் தொடருக்கு மாற்றாக இந்த ஆண்டு டி20 தொடரை நடத்த பிசிசிஐ ஏற்பாடு செய்ய உள்ளதாக தகவல் வெளி வந்துள்ளன. இருப்பினும் ஆசிய கோப்பை குறித்தும் இந்த இரண்டு டி20 தொடர் நடத்த இருப்பதை குறித்தும் இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வரவில்லை.

Advertisement