IND vs WI : டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியின் முக்கிய சாதனையை சமன் செய்ய காத்திருக்கும் – இந்திய அணி

INDvsPAK
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முடிந்த முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி இந்த 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

IND vs WI

- Advertisement -

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது. செயின்ட் கிட்ஸ்-ஸில் உள்ள வாரனர் பார்க் மைதானத்தில் நடைபெறும் இந்த இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் பாகிஸ்தான் அணியின் முக்கிய சாதனை ஒன்றை டி20 கிரிக்கெட்டில் சமன் செய்யும் மிகப்பெரிய வாய்ப்பு இந்திய அணிக்கு கிடைத்துள்ளது.

அந்த வகையில் இந்திய அணி இன்று சமன் செய்யப்போகும் அந்த சாதனையின் விவரத்தை தான் நாங்கள் இங்கே உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம். அதன்படி இதுவரை இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 21 டி20 போட்டிகளில் விளையாடி 14 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

Arshdeep Singh IND vs WI

அதே வேளையில் பாகிஸ்தான் அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 21 டி20 போட்டிகளில் விளையாடி 15 வெற்றிகளை பெற்றுள்ளது. எனவே இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 15 வெற்றிகளை பெற்று இந்த பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் பாகிஸ்தான் அணியுடன் இந்திய அணியும் இந்த சாதனையை சமன் செய்யும்.

- Advertisement -

இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக வெற்றிகளை பெற்ற அணியாக இந்த சாதனை பட்டியலில் இந்திய அணி மூன்றாவது இடத்தினை பிடிக்கும். அதே வேளையில் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக வெற்றிகளை பெற்ற அணியாக இந்திய அணி தான் இந்த பட்டியலிலும் முதலிடம் வகிக்கிறது.

இதையும் படிங்க : IND vs WI : பெஞ்சில் அமர்வதற்காகவே அவர்களை செலக்ட் பண்ணிருக்கீங்களா – டேனிஷ் கனேரியா கேள்வி

டி20 கிரிக்கெட்டினை பொறுத்தவரை இந்திய அணியானது இலங்கை அணிக்கு எதிராக மட்டும் டி20 கிரிக்கெட்டில் 17 முறை வெற்றிகளை பெற்றுள்ளது. அதேபோன்று இரண்டாவது இடத்தில் பாகிஸ்தான அணி ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 16 வெற்றிகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement