IND vs WI : பெஞ்சில் அமர்வதற்காகவே அவர்களை செலக்ட் பண்ணிருக்கீங்களா – டேனிஷ் கனேரியா கேள்வி

Kaneria
- Advertisement -

ஜிம்பாப்வேக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா பங்கேற்கும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. தற்போது வெஸ்ட் இண்டீசில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று வரும் இந்தியா வரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதியன்று அந்த சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு தாயகம் திரும்புகிறது. அதன்பின் ஒரு வாரம் ஓய்வெடுக்கும் இந்திய அணியினர் ஆகஸ்ட் 18, 20, 22 ஆகிய தேதிகளில் ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேயில் 3 ஒருநாள் போட்டிகளில் களமிறங்குகின்றனர். அதற்காக அறிவிக்கப்பட்டுள்ள அணியில் விராட் கோலி, கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் ஓய்வெடுக்கும் நிலையில் சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் அசத்திய ஷிகர் தவான் மீண்டும் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

INDvsZIM

- Advertisement -

அவரது தலைமையில் நீண்ட போராட்டத்திற்குப் பின் ராகுல் திரிபாதி முதல் முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருடன் தீபக் ஹூடா, இஷான் கிசான், ருதுராஜ், சஞ்சு சாம்சன், அக்சர் படேல், முகமது சிராஜ் போன்ற திறமையான வீரர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதுபோக சமீப காலங்களில் காயத்தால் அவதிப்பட்டு வந்த தீபக் சஹர், குல்தீப் யாதவ் மற்றும் தமிழகத்தின் வாசிங்டன் சுந்தர் ஆகியோர் அதிலிருந்து குணமடைந்து அணிக்கு திரும்பியுள்ளனர். இருப்பினும் இந்த அணியில் ஆவேஷ் கான் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் சுமாராக செயல்பட்ட பின்பும் மீண்டும் அணியில் சேர்க்கப் பட்டுள்ளது ரசிகர்களுக்கு ஆச்சர்யமாக அமைந்துள்ளது.

சொதப்பிய ஆவேஷ்:
குறிப்பாக சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் சுமாராக பந்துவீசிய பிரஸித் கிருஷ்ணாவுக்கு பதிலாக 2-வது போட்டியில் அறிமுகமாக களமிறங்கும் வாய்ப்பை பெற்ற ஆவேஷ் கான் சுமாராக கூட செயல்படாமல் 6 ஓவரில் 54 ரன்களை வாரி வழங்கி மோசமாக பந்து வீசினார். மேலும் கடந்த ஜூலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ராஜ்கோட் நகரில் நடந்த டி20 போட்டியில் 4 விக்கெட்டுகள் எடுத்ததை தவிர இதுவரை இந்தியாவுக்காக அவர் விளையாடி அத்தனை போட்டிகளிலும் சொதப்பலாகவே செயல்பட்டுள்ளார்.

Avesh Khan Prasidh Krishna

அதனால் அதிருப்தியடைந்துள்ள முன்னாள் பாகிஸ்தான் வீரர் டேனிஷ் கனேரியா ஏற்கனவே சுமாராக செயல்பட்டதன் காரணமாக எப்படியும் விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் வாய்ப்பு கிடைக்காது என்ற நிலையில் ஜிம்பாப்வே தொடரில் பெஞ்சில் அமர்வதற்காக ஆவேஷ் கான் தேர்வு செய்யப்பட்டுள்ளாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஒருவேளை மற்றொரு வாய்ப்பு என்று கருதினால் அதற்கு வெறும் 3 டி20 போட்டிகளில் வாய்ப்பு பெற்று சுமாராக செயல்பட்டதால் வந்த வாக்கிலேயே காணாமல் போன உம்ரான் மாலிக்க்கு ஜிம்பாப்வே போன்ற கத்துக்குட்டி அணிக்கு எதிராக வாய்ப்பு கொடுத்திருக்கலாமே என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “தனக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்புகளில் ஆவேஷ் கான் சிறப்பாக செயல்பட தவறியுள்ளார். அதனால் எதற்காக அவரை அணியில் சேர்த்துள்ளீர்கள் என்று தேர்வுக் குழுவை நான் கேட்க விரும்புகிறேன். ஒருவேளை பெஞ்சில் அமர்வதற்காகவா? அதே சமயம் இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சமி போன்ற சீனியர் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஆரம்பகட்ட போட்டிகளில் நிலையாக செயல்பட தவறிய உம்ரான் மாலிக்க்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுக்க தேர்வுக் குழுவுக்கு இதுவே சரியான தருணமாக இருந்தது. ஆனாலும் அவர்கள் அதை செய்யவில்லை” என்று கூறினார்.

Kaneria

பிரசித் கிருஷ்ணா, ஆவேஷ் கான், உம்ரான் மாலிக் என இந்த அனைத்து இளம் வீரர்களைக் காட்டிலும் சமீபத்தில் கிடைத்த வாய்ப்புகளில் வேகத்தில் விவேகமாக பந்து வீசி அனைவரின் பாராட்டுக்களை பெற்ற இளம் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷிதீப் சிங்கிற்கு இந்த ஜிம்பாப்வே தொடரில் பெஞ்சில் அமரும் வாய்ப்பு கூட தேர்வுக்குழு கொடுக்காதது அனைவரையும் கோபமடைய வைத்துள்ளது.

- Advertisement -

ஏற்கனவே ஜஸ்பிரித் பும்ரா, புவனேஸ்வர் குமார் போன்ற வலதுகை வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கும் இந்திய அணியில் தரமான இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லாதது தெரிந்தும் அவருக்கு வாய்ப்பளிக்காதது ஏன் என பல ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் கேள்வி எழுப்புகின்றனர்.

இதையும் படிங்க : டெஸ்ட் கிரிக்கெட்டில் நான் அறிமுகமானது இப்படித்தான். 26 ஆண்டுகால சுவாரசியத்தை – பகிர்ந்த ராகுல் டிராவிட்

அதைப் பற்றி டேனிஷ் கனேரியா மேலும் பேசியது பின்வருமாறு. “இந்த அணியில் அர்ஷிதீப் சிங் பெயரையும் பார்க்க முடியவில்லை. என்னை கேட்டால் அவருக்கு இந்திய அணி நிர்வாகம் தொடர்ச்சியாக வாய்ப்பளித்தது விளையாடும் வாய்ப்பை கொடுக்க வேண்டும். அப்போது தான் அவரால் இன்னும் முதிர்ச்சியான பவுலராக மேலும் முன்னேற்றமடைய முடியும்” என்று கூறினார்.

Advertisement