- Advertisement -
இந்திய கிரிக்கெட்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 2 ஆவது அணியாக வரலாற்று சாதனையை நிகழ்த்திய இந்திய அணி – விவரம் இதோ

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் தற்போது இந்திய அணி பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டி ஏற்கனவே நடைபெற்று முடிந்த வேளையில் அந்த ஆட்டத்தில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் காரணமாக இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக வரலாற்று சாதனை :

அதற்கடுத்து இந்திய அணியானது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டாவது போட்டியில் தற்போது விளையாடி வருகிறது. அதன்படி டெல்லியில் நடைபெற்று வரும் இரண்டாவது போட்டியிலும் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது . இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் விளையாடிய இந்திய அணியானது :

- Advertisement -

தங்களது முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை இழந்து 518 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. அதனை தொடர்ந்து விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்களை மட்டுமே குவித்துள்ளது. இதன் காரணமாக 378 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் நாளை மூன்றாம் நாள் ஆட்டத்தில் விளையாட இருக்கிறது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக நீண்ட ஆண்டு கால வரலாற்று சாதனை ஒன்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நிகழ்த்தப்பட்டுள்ளது. அதாவது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்த போட்டியின் முதலில் விளையாடிய இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்தாலும் அந்த அனைத்து விக்கெட்டுகளுக்கும் 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தியுள்ளது.

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இப்படி ஒரு அணி முதல் ஐந்து விக்கெட்டுகளுக்கும் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைப்பது இதுவே இரண்டாவது முறை. கடந்த 1960 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி இந்த சாதனையை நிகழ்த்தியிருந்தது.

இதையும் படிங்க : இதெல்லாம் விளையாட்டுல சகஜம் தான்.. ரன் அவுட்டானது குறித்து பேசிய ஜெய்ஸ்வால் – விவரம் இதோ

அதன்பின்னர் அவர்களுக்கு அடுத்து இப்படி ஒரு சாதனையை இந்திய அணி இரண்டாவதாக நிகழ்த்தியுள்ளது. ஒட்டுமொத்தமாக இப்படி டெஸ்ட் போட்டிகளில் முதல் ஐந்து விக்கெட்டுகளுக்கு 50+ ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடுவது இந்திய அணிக்கு இது மூன்றாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -