இதெல்லாம் விளையாட்டுல சகஜம் தான்.. ரன் அவுட்டானது குறித்து பேசிய ஜெய்ஸ்வால் – விவரம் இதோ

Jaiswal Runout
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது நேற்று அக்டோபர் 10-ஆம் தேதி டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் முதலில் இந்திய அணி பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். அதை தொடர்ந்து விளையாடிய இந்திய அணியானது தங்களது முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை இழந்து 518 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது.

ரன் அவுட்டானது குறித்து பேசிய யாஷஸ்வி ஜெய்ஸ்வால் :

அதற்கடுத்து தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணியானது தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வரும் வேளையில் இரண்டாம் நாள் ஆட்டத்தில் 4 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் எடுத்துள்ளது. இதன் காரணமாக 378 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் நாளைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாட இருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது முதல் இன்னிங்சில் இந்திய அணி சார்பாக அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் முதல் நாள் அன்று சதம் அடித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அதனால் இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் அவர் தொடர்ச்சியாக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரட்டை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதோடு இரட்டை சதம் மட்டுமின்றி முச்சதமும் அடிக்கும் வாய்ப்பு அவருக்கு பிரகாசமாக இருந்ததாகவும் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். ஆனால் இன்றைய போட்டி ஆரம்பித்ததும் சிங்கிள் எடுக்க ஆசைப்பட்டு ஓடி வந்து ஜெய்ஸ்வால் 175 ரன்களில் வெளியேறினார். அவர் அவுட்டான விதம் அவராலே ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதால் மிகவும் வருத்தத்துடன் வெளியேறியிருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தான் ரன் அவுட்டானது குறித்து பேசியிருந்த சுப்மன் கில் கூறியதாவது : எப்போதுமே நான் எவ்வளவு தூரம் நீண்ட இன்னிங்க்ஸை விளையாட முடியுமோ அதை யோசித்து தான் முயற்சி செய்து வருகிறேன். இந்த போட்டியில் ரன் அவுட்டானது இயல்பான ஒன்றுதான். ஏனெனில் விளையாட்டில் இது போன்ற நிகழ்வுகளும் நடக்கும். எனவே வருத்தமாக இருந்தாலும் ஏற்றுக் கொண்டு வெளியேறினேன்.

இதையும் படிங்க : இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலியின் சாதனையை சமன் செய்த சுப்மன் கில் – விவரம் இதோ

நிச்சயம் இனி டெஸ்ட் போட்டிகளில் எவ்வளவு தூரம் என்னால் நிலைத்து நின்று ஆட முடியுமோ அந்த அளவிற்கு நிலையான ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்துவேன். இந்த போட்டியில் முதல் ஒரு மணி நேரம் நான் களத்தில் நின்று விட்டால் அதன்பிறகு ரன்களை குவிப்பது எளிதாக இருக்கும் என்று நினைத்தேன். அதன்படியே மைதானத்தின் தன்மையை கணித்து சிறப்பாக விளையாடியதாகவும் ஜெய்ஸ்வால் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement