IND vs ENG : 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு – 17 பேர் கொண்ட முழுலிஸ்ட் இதோ

Rohit-Sharma-IND-Captain
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி முடிந்த பின்னர் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நடைபெற இருக்கிறது. இந்த சுற்றுப்பயணத்தில் ஜூலை 12-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை தற்போது பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணியில் சில குறிப்பிட தகுந்த மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

indvseng

- Advertisement -

அந்த வகையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு டெஸ்ட் போட்டியை தவறவிட்ட ரோகித் சர்மா ஒருநாள் அணிக்காக கேப்டனாக செயல்படுவார் என்றும் டெஸ்ட் மற்றும் டி20 அணிகளில் புறக்கணிக்கப்பட்டு வரும் ஷிகார் தவான் ஒருநாள் போட்டியில் விளையாட தகுதியானவர் என்பதனால் மீண்டும் ஒருமுறை அவரின் மீதுள்ள நம்பிக்கை காரணமாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதேபோன்று சமீப காலமாக ஒருநாள் போட்டிகளில் விளையாடாமல் இருந்த ஹர்திக் பாண்டியா ஓராண்டிற்கு பிறகு மீண்டும் தேர்வாகியுள்ளார். அவரைத் தொடர்ந்து காயம் காரணமாக ஒருநாள் போட்டிகளில் விளையாடாமல் இருந்த ஆல்ரவுண்டர் ஜடேஜாவும் நீண்ட இடைவெளிக்கு பின்னர் இந்திய அணிக்கு திரும்பி உள்ளார்.

dhawan

சமீப காலமாகவே இந்திய அணியில் பல மாற்றங்கள் நிகழ்ந்து வரும் வேளையில் இந்த ஒருநாள் தொடருக்கான அணியில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும் இந்த ஒரு நாள் தொடருக்கான இந்திய அணியில் கூடுதல் சேர்க்கையாக t20 கிரிக்கெட்டில் தென்ஆப்பிரிக்கா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு எதிரான தொடரில் இடம் பிடித்தும் பிளேயிங் லெவனில் விளையாடாத அர்ஷ்தீப் சிங்குக்கு ஒரு நாள் போட்டிகளில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

- Advertisement -

என்னதான் இவர் இந்திய அணியின் வீரர்கள் பட்டியலில் இருந்தாலும் அவர் பிளேயிங் லெவனில் விளையாடுவது கடினமே. அதன்படி இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் முழு வீரர்கள் லிஸ்ட் இதோ :

இதையும் படிங்க : தோனிக்கு நடந்த அதே விஷயம் என்னோட கேப்டன் பதவியிலும் நடந்திருக்கு – பும்ரா நெகிழ்ச்சி

ரோகித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், இஷான் கிஷன், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், பும்ரா, பிரசித் கிருஷ்ணா, முகமது ஷமி, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங்.

Advertisement