தோனிக்கு நடந்த அதே விஷயம் என்னோட கேப்டன் பதவியிலும் நடந்திருக்கு – பும்ரா நெகிழ்ச்சி

Bumrah-and-Dhoni
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் தள்ளி வைக்கப்பட்ட ஐந்தாவது போட்டியானது இன்று எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கு முன்னதாக கவுண்டி அணியுடன் இணைந்து பயிற்சி ஆட்டத்தில் விளையாடிய போது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிற்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் அவர் இந்த ஐந்தாவது போட்டியை தவற விட்டுள்ளார்/ அவருக்கு பதிலாக தற்போது இந்திய அணியின் புதிய கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் பும்ரா அணியை வழிநடத்துவார் என்று பிசிசி அதிகாரவபூர்வமாக அறிவித்துள்ளது.

Jasprith Bumrah India

- Advertisement -

இதன் காரணமாக கபில் தேவுக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணியை வழிநடத்தும் முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார். கடந்த 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய டெஸ்ட் அணியை ஒரு வேகப்பந்து வீச்சாளர் வழிநடத்த உள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை 29 டெஸ்ட் போட்டிகளின் விளையாடி உள்ள பும்ரா 123 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் தனக்கு வழங்கப்பட்ட இந்த கேப்டன் பதவி குறித்து பேசியுள்ள பும்ரா கூறுகையில் : எனக்கு கிடைத்துள்ள இந்த பதவி மிகப்பெரிய ஒரு கௌரவம். நான் இதுவரை கிரிக்கெட் விளையாடியதில் இதை மிகப்பெரிய சாதனையாக கருதுகிறேன். நான் கேப்டன் பொறுப்பு ஏற்றதும் தோனி என்னிடம் கூறிய ஒரு விடயம் எனக்கு ஞாபகம் வருகிறது. அந்த விடயம் யாதெனில் :

Bumrah 1

தோனி இந்திய அணிக்காக நேரடியாக கேப்டனாக பொறுப்பேற்றதாகவும் அதற்கு முன்பு வேறு எங்கும் கேப்டனாக இருந்ததில்லை என்றும் அவர் என்னிடம் தெரிவித்து இருந்தார். தற்போது அவரைப் போன்றே நானும் நேரடியாக இந்திய அணிக்கு கேப்டன் ஆகியுள்ளேன். தோனி மிகவும் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவர். அணிக்கு எப்படி உதவுவது என்பதில் அவர் கவனம் செலுத்திக் கொண்டே இருப்பார் .

- Advertisement -

அதேபோன்று நானும் எனது இந்த கேப்டன்சியை வைத்துக்கொண்டு இந்திய அணிக்காக எனது சிறப்பான பங்களிப்பை அளிக்க முயற்சிப்பேன் என்று பும்ரா கூறியுள்ளார். ஏற்கனவே பும்ரா அளித்திருந்த ஒரு பேட்டியில் :

இதையும் படிங்க : வைராக்கியத்துடன் 9 வருடங்களாக வீட்டுக்கு செல்லாமல் இருக்கும் மும்பை வீரர், நெகிழ்ச்சி பின்னணி

இந்திய அணியின் வருங்கால கேப்டனாக என்னை நியமிக்க நினைத்தால் நான் செயல்பட தயார் என்று கூறியிருந்த வேளையில் தற்போது பும்ராவிற்கு கேப்டன் வாய்ப்பு தேடி வந்துள்ளது. நிச்சயம் இதனை அவர் சரியாக பயன்படுத்தினால் இந்திய அணியின் எதிர்கால நிரந்தர கேப்டனாகவும் மாற அதிக வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement