உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு – முழு லிஸ்ட் இதோ

Williamson-1

ஐசிசி டெஸ்ட் போட்டிகளின் மீது உள்ள சுவாரஸ்யத்தை அதிகரிப்பதற்காக 2019ஆம் ஆண்டு டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை அறிமுகப்படுத்தியது. அதிலிருந்து 2021 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற டெஸ்ட் தொடர்களை கணக்கில் கொண்டு டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெறும் என அறிவித்திருந்தது. அதன்படி இந்த இரண்டு ஆண்டு காலத்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடர்களை கணக்கில் வைத்து தற்போது இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு விளையாட தகுதி ஆகியுள்ளன.

INDvsNZ

இந்த போட்டி இங்கிலாந்து நாட்டின் சவுதாம்ப்டன் நகரில் ஜூன் 18-ஆம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடருக்கான நியூசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகள் தயாராகி வரும் நிலையில் தற்போது இந்த இறுதிப் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

மேலும் இந்த அணியே இங்கிலாந்து அணிக்கெதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் என்று பிசிசிஐ என்று அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த டெஸ்ட் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியை அறிவித்துள்ள பிசிசிஐ கேப்டனாக விராட் கோலியையும், துணை கேப்டனாக ரஹானே நியமித்துள்ளது.

Kohli 1

இன்று இந்திய அணி வீரர்களின் பட்டியல் வெளியானதால் அவர்கள் இம்மாத இறுதியில் இங்கிலாந்திற்கு பயணம் மேற்கொள்வார்கள் என்றும் தெரிய வந்துள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் விவரம் இதோ :

- Advertisement -

இந்திய அணி வீரர்களின் லிஸ்ட் இதோ :ரோகித் சர்மா, சுப்மன் கில், மயாங்க் அகர்வால், புஜாரா, விராட் கோலி, ரஹானே, ஹனுமா விஹாரி, ரிஷப் பன்ட், அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஜஸ்ப்ரீத் பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், ( கே.எல். ராகுல் மற்றும் சாஹா உடற்தகுதி அடிப்படையில் முடிவு)

Advertisement