- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு – லிஸ்ட் இதோ

சொந்த மண்ணில் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணியானது அடுத்ததாக அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட இருக்கிறது. இந்த தொடர்களுக்கான இந்திய டி20 அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேளையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடர்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு :

அந்த வகையில் இம்மாதம் இறுதியில் இங்கிலாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியானது ஜூலை 1-ஆம் தேதி முதல் ஜூலை 19-ஆம் தேதி வரை 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த ஒருநாள் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை இன்று பி.சி.சி.ஐ அறிவித்தது.

- Advertisement -

அதில் சுப்மன் கில் தலைமையில் 15 வீரர்களுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கேப்டனாக சுப்மன் கில்லும், துணை கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயரும் நியமிக்கப்பட்டுள்ளனர். மற்றபடி ரோகித் சர்மா, கே,எல் ராகுல், இஷான் கிஷன் ஆகியோருக்கு டாப் ஆர்டரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்களாக வாஷிங்டன் சுந்தர், அக்ஸர் பட்டேல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

முதன்மை ஸ்பின்னராக குல்தீப் யாதவ் இடம்பிடித்துள்ளார். மற்றபடி நிதீஷ்குமார் ரெட்டி, ஜஸ்ப்ரீத் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா, குர்னூர் பிராட் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். இதில் நட்சத்திர வீரரான விராட் கோலிக்கும் இடம் வழங்கப்பட்டிருந்தாலும் அவரது உடற்தகுதியை பொறுத்தே அவர் இடம் பெறுவாரா? மாட்டாரா? என்பது உறுதி செய்யப்படும் என்று அறிவிக்கப்ட்டுள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : இந்த விடயத்தில் நான் ரொம்ப லக்கி.. தன்னுடைய பேட்டிங் குறித்து – யாஷஸ்வி ஜெய்ஸ்வால் பேட்டி

1) சுப்மன் கில், 2) ஷ்ரேயாஸ் ஐயர், 3) ரோஹித் சர்மா, 4) விராட் கோலி*, 5) கே.எல் ராகுல், 6) இஷான் கிஷன், 7) வாஷிங்டன் சுந்தர், 8) அக்சர் படேல், 9) நிதீஷ் குமார் ரெட்டி, 10) குல்தீப் யாதவ், 11) ஜஸ்ப்ரீத் பும்ரா, 12) பிரசித் கிருஷ்ணா, 13) அர்ஷ்தீப் சிங், 14) குர்னூர் பிரார், 15) ஹர்ஷித் ராணா.

- Advertisement -