- Advertisement -
இந்திய கிரிக்கெட்

டி20 போட்டிகளில் எந்தவொரு அணியும் செய்யாத சாதனையை நிகழ்த்திய இந்திய அணி – விவரம் இதோ

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்கள் முடிவடைந்த வேளையில் நேற்று முன்தினம் ஜனவரி 25-ஆம் தேதி கவுகாத்தி நகரில் மூன்றாவது டி20 போட்டியானது நடைபெற்றது. அந்த போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்களை குவித்தது.

டி20 போட்டிகளில் இந்திய அணி நிகழ்த்திய சாதனை :

பின்னர் 154 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது துவக்கத்தில் இருந்தே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெறும் 10 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 155 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதோடு இந்த 5 போட்டிகள் கொண்ட தொடரை மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் எந்த ஒரு அணியும் செய்யாத மாபெரும் சாதனையை நிகழ்த்தி அசத்தியது. அதுகுறித்த விவரம் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்த வகையில் இந்திய அணி நிகழ்த்திய சாதனை யாதெனில் : சர்வதேச டி20 போட்டிகளில் 150-க்கும் மேற்பட்ட இலக்கினை அதிக பந்துகள் மீதம் வைத்து வெற்றி பெற்ற அணியாக இந்திய அணி தற்போது முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் அணி தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக கடந்த 2024-ஆம் ஆண்டு 150-க்கும் மேற்பட்ட இலக்கினை 37 பந்துகள் மீதம் வைத்து வெற்றி பெற்றிருந்தது.

- Advertisement -

இதையும் படிங்க : போட்டி முடிந்து அபிஷேக் சர்மாவின் பேட்டை வாங்கி பரிசோதித்த நியூசிலாந்து வீரர்கள் – என்ன நடந்தது?

அதுவே இதுவரை சாதனையாக இருந்த வேளையில் தற்போது முதல் அணியாக இந்திய அணி 10 ஓவர்கள் மீதம் வைத்து 150-க்கும் மேற்பட்ட ரன்களை வெற்றிகரமாக சேசிங் செய்து சாதனை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டியானது ஜனவரி 28-ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -