நியூசிலாந்து அணிக்கு எதிராக ஜனவரி 25-ஆம் தேதியன்று கௌகாத்தி நகரில் நடைபெற்ற மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடிய இந்திய அணியானது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அவர்களை வீழ்த்தி இந்த தொடரினை மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. அதிலும் குறிப்பாக இந்த போட்டியில் இந்திய அணி 154 ரன்கள் என்கிற இலக்கினை 10 ஓவர்களில் சேசிங் செய்தது பலரது மத்தியிலும் பாராட்டுக்களை பெற்று வருகிறது.
அபிஷேக் சர்மாவின் பேட்டை பரிசோதித்த நியூசிலாந்து வீரர்கள் :
அந்த வகையில் நடைபெற்று முடிந்த இந்த போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 153 ரன்களை மட்டுமே குவிக்க அடுத்ததாக விளையாடிய இந்திய அணி 154 ரன்கள் என்கிற இலக்கினை 10 ஓவர்களில் வெறும் 2 விக்கெடுகளை மட்டும் இழந்து 155 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இந்த தொடரை கைப்பற்றயிருந்தது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக துவக்க வீரரான அபிஷேக் சர்மா வெறும் 20 பந்துகளை மட்டும் சந்தித்து 7 பவுண்டரி மற்றும் 5 சிக்சர் என 68 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். அவரது இந்த அதிரடியான ஆட்டத்திற்கு பலரது மத்தியிலும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இந்நிலையில் இந்த மூன்றாவது போட்டி முடிந்த பிறகு ஓய்வறைக்கு அபிஷேக் சர்மா திரும்பி சென்ற வேளையில் அவரை கவனித்த நியூசிலாந்து வீரர்கள் பலரும் அவரது அருகில் சென்று அந்த பேட்டை வாங்கி எப்படி இவ்வளவு பலமாக பந்துகள் இந்த பேட்டில் இருந்து பறக்கின்றன என்பது போல அவரை பார்த்து சில நகைச்சுவையான வார்த்தை பரிமாற்றங்களில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க : விராட் கோலியை பின்னுக்கு தள்ளி கேப்டனாக மாபெரும் சாதனையை நிகழ்த்திய சூரியகுமார் யாதவ் – விவரம் இதோ
அதற்கு காரணம் யாதெனில் : இந்த போட்டியின் போது 20 பந்துகளில் மொத்தம் 12 பவுண்டரிகளை அவர் விளாசி தள்ளியதாலே அவரது பேட்டில் ஏதோ சக்தி இருக்கிறதோ என்பது போன்று அந்த பேட்டை பரிசோதித்து நகைச்சுவையாக சில உரையாடல்களை நியூசிலாந்து வீரர்கள் களத்தில் செய்திருந்தனர். இந்த சம்பவம் இணையத்திலும் வீடியோவாக வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.



