IND vs PAK : நாளைய பாக் அணிக்கு எதிரான போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச லிஸ்ட் இதோ

IND-vs-PAK
Advertisement

கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று முன்தினம் ஆகஸ்ட் 30-ஆம் தேதி முல்தான் நகரில் 16-ஆவது ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரானது கோலாகலமாக துவங்கியது. அதனை தொடர்ந்து இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று இலங்கையில் நடைபெற்றது. இந்நிலையில் இந்த தொடரில் மிகப்பெரிய போட்டியாக பார்க்கப்படும் இந்தியா பாகிஸ்தான் போட்டி நாளை இலங்கையில் நடைபெற இருக்கிறது.

அதன்படி செப்டம்பர் 2-ஆம் தேதி கண்டியில் நடைபெறும் இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் விளையாட இருக்கின்றன.

- Advertisement -

எதிர்வரும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக நடைபெற்று வரும் இந்த ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி பெற்று அதே உத்வேகத்துடன் 50 உலகக் கோப்பை தொடருக்கு செல்ல வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புவதால் இந்த தொடரானது இந்திய அணிக்கு மிக முக்கியமான தொடராக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நாளை பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் எந்தெந்த வீரர்களுக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்கும் என்பது குறித்த பட்டியலை நாங்கள் இங்கே உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம்.

அதன்படி இந்திய அணியின் துவக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் விளையாடுவார்கள் என்று தெரிகிறது. அவர்களை தொடர்ந்து மிடில் ஆர்டரில் மூன்றாவது இடத்தில் விராட் கோலியும், நான்காவது இடத்தில் ஷ்ரேயாஸ் ஐயரும் விளையாடுவார்கள் என்று தெரிகிறது. அதேபோன்று விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ஐந்தாவது இடத்தில் இஷான் கிஷன் விளையாட அதிக வாய்ப்பு உள்ளது.

- Advertisement -

ஆல்ரவுண்டர்களாக ரவீந்திர ஜடேஜா மற்றும் ஹார்டிக் பாண்டியா ஆகியோர் விளையாட இருக்கின்றனர். மேலும் ஒரே ஒரு சுழற்பந்து வீச்சாளராக குல்தீப் யாதவ் இடம் பெறுவார். அவர்களை தவிர்த்து மூன்று வேகப்பந்து வீச்சாளராக முகமது ஷமி, முகமது சிராஜ், பும்ரா ஆகியோர் விளையாட அதிக வாய்ப்புள்ளது. அதன்படி நாளைய பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் உத்தேச பட்டியல் இதோ :

இதையும் படிங்க : பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் செயல்பாடுகள் எப்படி? வரலாற்று புள்ளிவிவரம், அதிக ரன்கள் – விக்கெட் எடுத்தவர்களின் பட்டியல்

1) ரோஹித் சர்மா, 2) சுப்மன் கில், 3) விராட் கோலி, 4) ஷ்ரேயாஸ் ஐயர், 5) இஷான் கிஷன், 6) ஹார்டிக் பாண்டியா, 7) ரவீந்திர ஜடேஜா, 8) குல்தீப் யாதவ், 9) முகமது ஷமி, 10) முகமது சிராஜ், 11) ஜஸ்ப்ரீத் பும்ரா.

Advertisement