சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்று வரும் 17-வது ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணியானது ஏற்கனவே தங்களது முதல் லீக் போட்டியில் ஐக்கிய அரபு அமீரக அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தலாக இந்த தொடரை ஆரம்பித்துள்ளது. நடப்பு சாம்பியனான இந்திய அணி முதல் போட்டியிலேயே பிரமாதமான வெற்றியை பெற்றுள்ளது ரசிகர்கள் மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் அணிக்கெதிரான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் :
அதற்கடுத்து இந்திய அணியானது இந்த தொடரில் தங்களது இரண்டாவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து நாளை செப்டம்பர் 14-ஆம் தேதி துபாய் மைதானத்தில் நடைபெற இருக்கும் போட்டியில் விளையாட இருக்கிறது. இதற்காக இந்திய அணி வீரர்கள் தற்போது தீவிர பயிற்சினை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் நாளை பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் இந்த இரண்டாவது லீக் போட்டிக்கான இந்திய அணியில் ஒரு சில மாற்றங்கள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிராக பும்ராவை மட்டுமே முதன்மை வேகப்பந்து வீச்சாளராக வைத்துக்கொண்டு இந்திய அணி விளையாடியது பலரது மத்தியிலும் பேசுபொருளாக மாறியது.
இதன் காரணமாக இரண்டாவது வேகப்பந்து வீச்சாளராக அர்ஷ்தீப் சிங் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவார் என்று தெரிகிறது. அதனால் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் அந்த ஒரு மாற்றம் நிகழும் என்றும் அப்படி அர்ஷ்தீப் சிங் உள்ளே வரும் பட்சத்தில் திலக் வர்மா அல்லது ஷிவம் துபே ஆகிய இருவரில் ஒருவர் வெளியேற்றப்படலாம் என்று தெரிகிறது. அதிலும் குறிப்பாக ஷிவம் துபே கடந்த போட்டியின் போது பந்துவீச்சில் கை கொடுத்ததால் திலக் வர்மா வெளியேற்றப்பட்டு ஷிவம் துபே தக்கவைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
ஆனால் இவர்கள் இருவரில் ஒருவருக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங் அணியில் விளையாடுவது உறுதியாகும் என்றும் கூறப்படுகிறது. அதைத்தவிர்த்து வேறு எந்த மாற்றமும் இந்திய அணியில் இருக்காது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாட இருக்கும் இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் இதோ :
இதையும் படிங்க : சூரியகுமார் யாதவை பின்னுக்கு தள்ளி டி20 அரங்கில் வரலாற்று சாதனையை நிகழ்த்திய – பில் சால்ட்
1) அபிஷேக் சர்மா, 2) சுப்மன் கில், 3) சூரியகுமார் யாதவ் 4) திலக் வர்மா / ஷிவம் துபே, 5) சஞ்சு சாம்சன், 6) ஹார்டிக் பாண்டியா 7) அக்சர் படேல், 8) குல்தீப் யாதவ், 9) ஜஸ்ப்ரீத் பும்ரா, 10) அர்ஷ்தீப் சிங், 11) வருண் சக்கரவர்த்தி.



