- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அரையிறுதி போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான்.. ஒரு மாற்றம் நிகழ வாய்ப்பு – லிஸ்ட் இதோ

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வரும் 2025-ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் லீக் ஆட்டங்களில் விளையாடிய இந்திய அணி வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளை வீழ்த்தி குரூப் ஏ பிரிவில் முதலிடம் பிடித்து அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

அரையிறுதி போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் இதுதான் :

அதனைத் தொடர்ந்து எதிர்வரும் முதலாவது அரையிறுதி போட்டியில் இந்திய அணி மார்ச் 4-ஆம் தேதி துபாய் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது. இந்நிலையில் இந்த அரையிறுதி போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஏதாவது மாற்றம் இருக்குமா? என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அணியில் ஒரு மாற்றம் மட்டுமே நிகழ வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

- Advertisement -

ஏனெனில் கடைசியாக நடைபெற்று முடிந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இளம் வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷித் ராணாவிற்கு ஓய்வு வழங்கப்பட்டு அவருக்கு பதிலாக வருண் சக்கரவர்த்திக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பில் வருண் சக்கரவர்த்தி சிறப்பாக செயல்பட்டு 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதால் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கருத்துக்கள் இருந்து வந்தது.

ஆனாலும் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் கம்பீர் ஆகியோர் எப்போதுமே ஒரு நிலையான அணியை கொண்டு ஐ.சி.சி தொடர்களை அனுகுவார்கள் என்பதனால் இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இடம்பெற்ற ஹர்ஷித் ராணா மீண்டும் அரையிறுதி போட்டிக்கு வருவார் என்றும் அதன் காரணமாக வருண் சக்கரவர்த்தி வெளியேற்றப்படுவார் என்றும் தெரிகிறது.

- Advertisement -

ஏற்கனவே இந்திய அணியில் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக ஹார்டிக் பாண்டியாவும், மூன்று சுழற்பந்து வீச்சாளர்களும் இருப்பதினால் அந்த கூட்டணியுடனே இந்திய அணி அரையிறுதி போட்டியை அணுக அதிக வாய்ப்புள்ளது. அந்த வகையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அரையிறுதி போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : ரஞ்சி கோப்பையை வென்ற விதர்பா அணிக்கு பரிசுத்தொகையை அள்ளி வீசிய கிரிக்கெட் வாரியம் – விவரம் இதோ

1) ரோஹித் சர்மா, 2) சுப்மன் கில், 3) விராட் கோலி, 4) ஷ்ரேயாஸ் ஐயர், 5) கே.எல் ராகுல், 6) ஹார்டிக் பாண்டியா, 7) ரவீந்திர ஜடேஜா, 8) அக்சர் படேல், 9) குல்தீப் யாதவ், 10) முகமது ஷமி, 11) ஹர்ஷித் ராணா.

- Advertisement -