- Advertisement -
இந்திய கிரிக்கெட்

தெ.ஆ அணிக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – லிஸ்ட் இதோ

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் தற்போது இந்திய அணியானது பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டி ஏற்கனவே நடைபெற்று முடிந்த வேளையில் அந்த போட்டியில் 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த இந்திய அணி இந்த தொடரின் ஆரம்பத்திலேயே பின்னடைவை சந்தித்துள்ளது.

2 ஆவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் :

இதன் காரணமாக இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்த தொடரை சமன் செய்ய முடியும் என்கிற இக்கட்டான சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்துடன் தற்போது இந்திய அணியானது தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் நவம்பர் 22-ஆம் தேதியான நாளை கவுகாத்தி மைதானத்தில் தொடங்க இருக்கும் இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஒரு மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

அந்த வகையில் கடந்த முதலாவது டெஸ்ட் போட்டியின் போது காயம் காரணமாக அந்த போட்டியை தவறவிட்டு பாதியிலேயே வெளியேறிய சுப்மன் கில் வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக சாய் சுதர்சன் இடம் பிடிப்பார் என்று தெரிகிறது. மற்றபடி பிளேயிங் லெவனில் வேறு எந்த மாற்றமும் இருக்காது என்றும் தெரிகிறது. அதன்படி இந்த இரண்டாவது போட்டிக்கான துவக்க வீரர்களாக கே.எல் ராகுல் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் விளையாடுவார்கள்.

மூன்றாவது இடத்தில் மீண்டும் சாய் சுதர்சன் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோன்று நான்காவது இடத்தில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் கேப்டனாக விளையாடுவார். ஐந்தாவது இடத்தில் ரவீந்திர ஜடேஜாவும், ஆறாவது இடத்தில் துருவ் ஜுரேல் இடம் பெறுவார்கள் என்று தெரிகிறது.

- Advertisement -

ஏழாவது மற்றும் எட்டாவது இடத்தில் வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல் ஆகியோரும், ஒன்பதாவது இடத்தில் குல்தீப் யாதவும் விளையாடுவார்கள். எஞ்சியுள்ள இரண்டு இடங்களில் 10 மற்றும் 11 ஆகிய வரிசையில் பும்ரா மற்றும் சிராஜ் ஆகியோர் இடம்பெறுவார்கள் என்றும் தெரிகிறது. அதன்படி தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : ஈகோ வேணாம் தம்பி.. இதை பண்ணா நல்லா ஆடுவீங்க.. ஜெய்ஸ்வாலுக்கு அட்வைஸ் கொடுத்த – ஆகாஷ் சோப்ரா

1) யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 2) கே.எல் ராகுல், 3) சாய் சுதர்சன், 4) ரிஷப் பண்ட், 5) ரவீந்திர ஜடேஜா, 6) துருவ் ஜுரேல், 7) வாஷிங்டன் சுந்தர், 8) அக்சர் படேல், 9) குல்தீப் யாதவ், 10) முகமது சிராஜ், 11) ஜஸ்ப்ரீத் பும்ரா.

- Advertisement -