- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஆஸ்திரேலிய அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – லிஸ்ட் இதோ

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது நேற்று கான்பரா நகரில் நடைபெற்றது. இந்த போட்டி ஆரம்பித்து முதல் 10 ஓவர்களில் இந்திய அணி ஒரு விக்கெட் இழந்து 97 ரன்கள் குவித்திருந்த வேளையில் மழை காரணமாக போட்டி தடைப்பட்டு வெற்றி தோல்வியின்றி முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.

இரண்டாவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் :

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது மெல்போர்ன் நகரில் நாளை அக்டோபர் 31-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்காக தற்போது இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியின் போது எந்தெந்த வீரர்களுக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்கும்? என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. அந்த வகையில் இரண்டாவது டி20 போட்டிக்கான இந்திய அணியில் யார் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும்? என்பது குறித்த பட்டியலை இங்கு காணலாம்.

அந்த வகையில் ஏற்கனவே முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டுள்ளதால் இரண்டாவது போட்டியில் பெரியளவில் மாற்றம் இருக்காது என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக முதல் போட்டியில் விளையாடிய அதே இந்திய அணியே விளையாடும் துவக்க வீரர்களாக அபிஷேக் சர்மாவும், சுப்மன் கில்லும் விளையாடுவார்கள், மூன்றாவது இடத்தில் சூரியகுமார் யாதவும், நான்காவது இடத்தில் திலக் வர்மாவும் விளையாடுவார்கள்.

- Advertisement -

அதே போன்று ஐந்தாவது இடத்தில் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனும், ஆறாவது இடத்தில் ஷிவம் துபேவும், ஏழாவது மற்றும் எட்டாவது இடத்தில் அக்சர் பட்டேல் மற்றும் குல்தீப் யாதவும், ஒன்பதாவது இடத்தில் வருண் சக்கரவர்த்தியும் இடம் பெறுவார்கள். எஞ்சியுள்ள இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களுக்கான இடத்தில் ஹர்ஷித் ராணா மற்றும் ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகியோர் விளையாடுவார்கள் என்று தெரிகிறது. அதன்படி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : காயமடைந்த ஷ்ரேயாஸ் ஐயர் மீண்டும் கிரிக்கெட் காலத்திற்க்கு திரும்புவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் – விவரம் இதோ

1) அபிஷேக் சர்மா, 2) சுப்மன் கில், 3) சூரியகுமார் யாதவ், 4) திலக் வர்மா, 5) சஞ்சு சாம்சன், 6) ஷிவம் துபே, 7) அக்சர் படேல், 8) ஹர்ஷித் ராணா, 9) குல்தீப் யாதவ், 10) வருண் சக்கரவர்த்தி, 11) ஜஸ்ப்ரீத் பும்ரா.

- Advertisement -