காயமடைந்த ஷ்ரேயாஸ் ஐயர் மீண்டும் கிரிக்கெட் காலத்திற்க்கு திரும்புவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் – விவரம் இதோ

Shreyas Iyer
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஷ்ரேயாஸ் ஐயர் அண்மையில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் மூன்றாவது போட்டியின் போது அலெக்ஸ் கேரி அடித்த பந்தினை கேட்ச் பிடிக்க சென்று தடுமாறி கீழே விழுந்ததால் அவரது அடி வயிற்றில் காயம் ஏற்பட்டது. மண்ணீரலில் காயம் ஏற்பட்டு உள் ரத்தக்கசிவு ஏற்பட்டதன் காரணமாக அவர் மைதானத்தில் இருந்து வலியோடு வெளியேறி இருந்தார்.

ஷ்ரேயாஸ் ஐயர் காயத்திலிருந்து மீள்வதற்கு சில மாதங்கள் ஆகும் :

பின்னர் மருத்துவக்குழுவினர் முதலுதவி செய்ததற்கு அடுத்து அவர் நேரடியாக அங்கிருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வேளையில் அவரது காயம் சற்று தீவிரமாக இருந்ததால் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.

- Advertisement -

தீவிர சிகிச்சைக்கு பிறகு தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள ஷ்ரேயாஸ் ஐயர் தான் மீண்டும் நலமுடன் இருப்பதாக சமூக வலைதளத்தின் மூலம் செய்தியினை வெளியிட்டு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது மண்ணீரலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் அவர் கிரிக்கெட் களத்திற்கு திரும்ப இன்னும் சில மாதங்கள் ஆகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அந்த வகையில் வெளியான தகவலின் படி : தற்போது தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து வெளியேறியுள்ள ஷ்ரேயாஸ் ஐயர் மீண்டும் தனது கிரிக்கெட் பயிற்சியை துவங்க இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி அடுத்த சில மாதங்களுக்கு அவரால் கிரிக்கெட் களத்திற்கு திரும்ப முடியாது என்பதனால் அது இந்திய அணிக்கு பின்னடைவாக மாறும்.

- Advertisement -

இதன் காரணமாக அடுத்த நவம்பர்-டிசம்பர் மாதங்களில் நடைபெறவுள்ள தென்னாப்பிப்ரிக்க அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற இருக்கும் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் அவர் பங்கேற்பது சந்தேகமாகியுள்ளது.

இதையும் படிங்க : 2 ஆவது இந்திய வீரராகவும், 2 ஆவது அதிவேக வீரராகவும் சூரியகுமார் யாதவ் – நிகழ்த்திய சாதனை

இந்திய ஒருநாள் அணியின் மிடில் ஆர்டரில் நான்காவது இடத்தில் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்து வரும் அவர் தற்போது இந்த இரண்டு தொடரையும் தவறவிட இருப்பதினால் மிடில் ஆர்டரில் சிக்கல் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. அவருக்கு பதிலாக இந்திய அணி எப்படி மாற்றுவீரரை தயார் செய்யப்போகிறது என்பதை எதிர்வரும் தொடர்களில் தான் பார்க்க முடியும்.

Advertisement