
சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது சொந்த மண்ணில் நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று டி20 போட்டிகள் முடிவடைந்துள்ள வேளையில் இந்திய அணி இரண்டுக்கு ஒன்று (2-1) கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
அதனைத்தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டி20 போட்டியானது ஜனவரி 31-ஆம் தேதி இன்று புனே மைதானத்தில் துவங்கி நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் பங்கேற்க இருப்பதால் இந்த போட்டியில் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இன்றைய போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் என்னென்ன மாற்றங்கள் இருக்கும்? பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்கும்? என்பது குறித்த தகவலை இங்கு காணலாம். அந்த வகையில் கடந்த போட்டியில் விளையாடிய வீரர்களின் பெருமளவு மாற்றம் இருக்காது என்றே தெரிகிறது.
ஆனாலும் ரிங்கு சிங் மீண்டும் விளையாடும் அளவுக்கு உடற்தகுதியை பெற்றுள்ளதால் அவர் நிச்சயம் பிளேயிங் லெவனில் மீண்டும் இடம் பிடிப்பார் என்று தெரிகிறது. அதன்படி இந்த போட்டிக்கான இந்திய அணியில் துருவ் ஜுரேல் வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக ரிங்கு சிங் இடம் பிடிப்பார் என்று தெரிகிறது.
அதனை தவிர்த்து இந்திய அணியில் வேறுயெந்த மாற்றமும் இன்றி மூன்றாவது டி20 போட்டியில் விளையாடிய அதே அணி தான் விளையாடும் என்றும் தெரிகிறது. அந்த வகையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் பட்டியல் இதோ :
இதையும் படிங்க : 4 ஆவது டி20 போட்டிக்கான இந்திய அணியில் மீண்டும் கம்பேக் கொடுக்கும் அதிரடி வீரர் – விவரம் இதோ
1) சஞ்சு சாம்சன், 2) அபிஷேக் சர்மா, 3) சூரியகுமார் யாதவ், 4) திலக் வர்மா, 5) ஹார்டிக் பாண்டியா, 6) ரிங்கு சிங், 7) வாஷிங்டன் சுந்தர், 8) அக்சர் படேல், 9) ரவி பிஷ்னாய், 10) முகமது ஷமி, 11) வருண் சக்ரவர்த்தி.