4 ஆவது டி20 போட்டிக்கான இந்திய அணியில் மீண்டும் கம்பேக் கொடுக்கும் அதிரடி வீரர் – விவரம் இதோ

Rinku
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்த வேளையில் இந்திய அணி இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அதனை தொடர்ந்து எஞ்சியுள்ள இரண்டு ஆட்டங்கள் அடுத்தடுத்து நடைபெற இருக்கின்றன.

மீண்டும் கம்பேக் கொடுக்கும் நட்சத்திர வீரர் :

இந்த இரண்டு ஆட்டத்தில் ஒரு வெற்றி பெற்றால் கூட இந்திய அணி இந்த தொடரை எளிதாக கைப்பற்றி விடும். ஏற்கனவே இந்த டி20 தொடரின் முதல் போட்டியில் விளையாடியிருந்த இந்திய அணியின் நட்சத்திர அதிரடி வீரரான ரிங்கு சிங் அதற்கடுத்த இரண்டு போட்டிகளில் முதுகுவலி காரணமாக விளையாடாமல் இருந்தார்.

- Advertisement -

அதன் காரணமாக அவர் இந்த தொடரின் கடைசி இரண்டு போட்டிகளையும் தவறவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும் அவருக்கு பதிலாக மாற்று வீரரும் அறிவிக்கப்பட்டிருந்தனர். ஆனால் இன்று இங்கிலாந்து அணிக்கு எதிராக புனே மைதானத்தில் நடைபெற இருக்கும் நான்காவது டி20 போட்டிக்கான போட்டிக்கு முன் மீண்டும் அவர் இந்திய அணியில் இடம்பெற உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

அந்த வகையில் இந்திய அணியின் துணை பயிற்சியாளரான ரையன் டென்டெஸ்காத்தே கூறுகையில் : இந்த தொடரின் முதல் டி20 போட்டிக்கு ரிங்கு சிங் முதுகு பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக அவதிப்பட்டார். அதன் காரணமாக அவர் இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டியில் விளையாடவில்லை.

- Advertisement -

ஆனால் புனே நகரில் நடைபெற இருக்கும் நான்காவது டி20 போட்டிருக்கு முன்னதாக தற்போது நல்ல முறையில் தயாராகி நீண்ட நேரம் வலைப்பயிற்சியிலும் பேட்டிங் செய்துள்ளார். எனவே அவர் போட்டியில் விளையாடும் அளவிற்கு உடற்தகுதியுடன் இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அசத்தப்போகும் இந்திய வீரர் இவர்தான் – ஏ.பி.டி வில்லியர்ஸ் கணிப்பு

அவரது இந்த காரணமாக நிச்சயம் நான்காவது டி20 போட்டியில் அவர் மீண்டும் பிளேயிங் லெவனில் இடம்பிடித்து விளையாடுவார் என்று தெரிகிறது. இந்திய அணிக்காக கடந்த 2023-ஆம் ஆண்டு டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான ரிங்கு சிங் இதுவரை 31 போட்டிகளில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement