பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் எதிர்வரும் பிப்ரவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரானது நடைபெற இருக்கிறது. மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வெல்லப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ளது.
இந்திய அணியின் கீ பிளேயர் இவர்தான் :
அதோடு இந்த தொடருக்கான அட்டவனையும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படாமல் இருக்கும் வேளையில் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் அசத்தப்போகும் வீரர் யார் என்பது குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தென்னாப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரரான ஏ.பி.டி வில்லியர்ஸ் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் நிச்சயம் அசத்துவார் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : குல்தீப் யாதவ் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடும் இந்திய அணியில் நிச்சயம் இடம் பிடிப்பார். எனவே அவர் நிச்சயம் இந்திய அணியின் ஒரு முக்கிய வீரராக இருப்பார் என்பதை நான் உணர்கிறேன்.
ஏனெனில் துபாயில் உள்ள மைதானங்களில் மட்டும்தான் விளையாட இருக்கிறது. அந்த மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானம் என்பதனால் நிச்சயம் அவரால் அங்கு சிறப்பாக செயல்பட முடியும். ஆடுகளத்தின் சூழ்நிலை புரிந்துகொண்டு நிச்சயம் அவர் இந்திய அணியின் கீ பிளேயராக இருப்பார் என்று டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : கர்வத்தை அடக்கிடீங்க.. இந்திய நன்மைக்காக கோலி, ரோஹித் வெச்சு இந்த ட்ரெண்ட் தொடரனும்.. பதான் கோரிக்கை
சமீப காலமாகவே காயம் காரணமாக இந்திய அணியில் இடம்பெற முடியாமல் தவித்து வந்த குல்தீப் யாதவ் எதிர்வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் மீண்டும் இந்திய அணிக்காக விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.



