- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – லிஸ்ட் இதோ

அண்மையில் சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை கைப்பற்றிய இந்திய அணியானது அடுத்ததாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெறவிருக்கும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே ஆஸ்திரேலியா சென்றடைந்து பயிற்சியினை மேற்கொண்டு வருகிறது.

முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் :

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியானது நாளை மறுதினம் அக்டோபர் 19-ஆம் தேதி பெர்த் மைதானத்தில் துவங்க இருக்கிறது. இந்த போட்டியில் ஒரு பெரிய இடைவெளிக்கு பின்னர் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் விளையாட இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் இந்த போட்டி மிகப்பெரிய வரவேற்பினை பெற்றுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான இந்த முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது குறித்த உத்தேச பிளேயிங் லெவனை இந்த பதிவில் காணலாம். அந்த வகையில் இந்த முதலாவது ஒருநாள் போட்டிக்கான துவக்க வீரர்களாக கேப்டன் சுப்மன் கில் மற்றும் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் களமிறங்குவது உறுதி.

மூன்றாவது இடத்தில் வழக்கம் போல் விராட் கோலியும், நான்காவது இடத்தில் துணை கேப்டனான ஷ்ரேயாஸ் ஐயரும் விளையாடுவார்கள். ஐந்தாவது இடத்தில் விக்கெட் கீப்பராக கே.எல் ராகுல் இடம்பெறுவார். ஆறாவது இடத்தில் அக்சர் பட்டேலும், ஏழாவது இடத்தில் நிதீஷ் ரெட்டியும், எட்டாவது இடத்தில் வாஷிங்க்டன் சுந்தரும் இடம் பிடிப்பார்கள் என நம்பலாம்.

- Advertisement -

அதேபோன்று 9 ஆவது இடத்தில் குல்தீப் யாதவும், எஞ்சியுள்ள இரண்டு இடங்களுக்கு வேகப்பந்து வீச்சாளர்களாக அர்ஷ்தீப் சிங் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் இடம்பெறுவார்கள் என்று தெரிகிறது. இவர்களை தவிர்த்து யாஷஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜூரேல், ஹர்ஷித் ராணா மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் பெஞ்சில் அமர்வார்கள் என்று தெரிகிறது.

இதையும் படிங்க : நான் செலக்டரா இருந்தா யாஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு கண்டிப்பா அந்த வாய்ப்பை தருவேன் – மதன் லால் பேட்டி

ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் இதோ : 1) ரோஹித் சர்மா, 2) சுப்மன் கில், 3) விராட் கோலி, 4) ஷ்ரேயாஸ் ஐயர், 5) கே.எல் ராகுல், 6) அக்சர் படேல், 7) நிதீஷ் ரெட்டி, 8) வாஷிங்க்டன் சுந்தர், 9) குல்தீப் யாதவ், 10) அர்ஷ்தீப் சிங், 11) முகமது சிராஜ்.

- Advertisement -