நான் செலக்டரா இருந்தா யாஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு கண்டிப்பா அந்த வாய்ப்பை தருவேன் – மதன் லால் பேட்டி

Madan Lal
- Advertisement -

இந்திய அணியின் இளம் நட்சத்திர துவக்க ஆட்டக்காரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்திய அணிக்காக கடந்த 2023 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 26 டெஸ்ட் போட்டிகள், 1 ஒருநாள் போட்டி மற்றும் 23 டி20 போட்டிகளில் பங்கேற்று விளையாடியுள்ளார். டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரை தனது இடத்தினை நிரந்தரப்படுத்திக்கொண்ட அவர் ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் தனது வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.

யாஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு எல்லா டீம்லயும் இடம் கொடுக்கனும் : மதன் லால்

இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான சில ஆண்டுகளிலேயே தனது தொடர்ச்சியான ரன் குவிப்பின் மூலம் தனது இடத்தினை உறுதி செய்துகொண்ட அவர் விரைவில் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்று பல்வேறு முன்னாள் வீரர்களும், கிரிக்கெட் விமர்சகர்களும் தங்களது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

- Advertisement -

அந்தவகையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரரான மதன் லால் தான் இந்திய அணியின் தேர்வுக்குழு செலக்டராக இருந்தால் யாஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு 3 வகையான இந்திய அணியிலும் இடம் அளிப்பேன் என்று தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார். அந்தவகையில் அவர் கூறியதாவது :

ஒருவேளை நான் தற்போதைய இந்திய அணியின் செலக்டராக இருந்தால் எந்தவொரு வடிவத்தில் இருந்தும் யாஷஸ்வி ஜெய்ஸ்வாலை நீக்க மாட்டேன். அனைத்து வகையான இந்திய அணியிலும் அவருக்கு இடம் அளித்திருப்பேன். அவர் ஒரு உண்மையான மேட்ச் வின்னர். ஏற்கனவே அவர் ஆஸ்திரேலிய மண்ணிலேயே தனது திறமையை நிரூபித்து விட்டார்.

- Advertisement -

டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் என எந்த வகையான அணியிலும் பிளேயிங் லெவனில் இடம்பெறக்கூடிய வீரராக நான் யாஷஸ்வி ஜெய்ஸ்வாலை பார்க்கிறேன். இந்திய அணியின் அடுத்த எதிர்கால வீரராக நான் அவரை பார்க்கிறேன். அவருக்கு சரியான வாய்ப்பையும் தேவையான நேரத்தையும் கொடுத்தால் இன்னும் அவர் பிரகாசிப்பார் என மதன் லால் கூறியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ஐசிசி மகளிர் உ.கோ: 202 ரன்ஸ் 0 விக்கெட்.. வங்கதேசத்தை சாய்த்த ஆஸி.. உலக சாதனையுடன் செமி ஃபைனல்

டி20 போட்டிகளை பொறுத்தவரை தற்போது அபிஷேக் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் துவக்க வீரர்களாக விளையாடி வரும் வேளையில் விரைவில் யாஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது. அதேபோன்று ஒருநாள் போட்டிகளில் ரோஹித் சர்மா ஓய்வெடுக்கும்போது அந்த இடம் ஜெய்ஸ்வாலுக்கு வரும் என்று தெரிகிறது.

Advertisement