ஐசிசி மகளிர் உ.கோ: 202 ரன்ஸ் 0 விக்கெட்.. வங்கதேசத்தை சாய்த்த ஆஸி.. உலக சாதனையுடன் செமி ஃபைனல்

Australia Women_8qzE193Q0R
- Advertisement -

ஐசிசி மகளிர் 2025 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. அத்தொடரில் அக்டோபர் 16ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 17வது போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேச அணிகள் மோதின. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய வங்கதேசம் 50 ஓவரில் மிகவும் போராடி 198/9 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக சோபனா மாஸ்டரி 66*, ரூப்யா ஹைதர் 44 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக அலனா கிங், ஜார்ஜியா வேர்ஹம், அனபல் சதர்லாந்து, அஸ்லே கார்ட்னர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அடுத்து விளையாடிய ஆஸ்திரேலியாவுக்கு கேப்டன் அலிசா ஹீலி அதிரடியாக விளையாடினார்.

- Advertisement -

நொறுக்கிய ஆஸ்திரேலியா:

அவருக்கு மற்றொரு துவக்க வீராங்கனை போப் ஃலீச்பீல்ட் நிதானமாக விளையாடி கை கொடுத்தார். கடந்தப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக சதத்தை அடித்து ஃபார்முக்கு திரும்பிய ஹீலி இப்போட்டியில் சுமாராக பந்து வீசிய வங்கதேச பவுலர்களை அடித்து நொறுக்கினார். 43 பந்துகளில் அரை சதத்தை அடித்த அவருடன் லீச்பீல்ட் தம்முடைய பங்கிற்கு 50 ரன்கள் கடந்து ஆஸ்திரேலியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்தார்.

நேரம் செல்ல செல்ல வங்கதேசத்தை பந்தாடிய அந்த ஜோடி விக்கெட்டை விடாமல் போட்டியை முடித்தது. அதில் கேப்டன் ஹீலி 20 பவுண்டரியுடன் சதத்தை அடித்து113* (77), லீச்பீல்ட் 84* (72) ரன்கள் குவித்தனர். அதனால் 24.5 ஓவரிலேயே 202/0 ரன்களை எடுத்த ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது.

- Advertisement -

செமி ஃபைனலுக்கு தகுதி:

இதன் வாயிலாக மகளிர் உலகக் கோப்பையில் ஒரு விக்கெட்டை கூட இழக்காமல் அதிகபட்ச இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்த அணியாக ஆஸ்திரேலியா உலக சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் 1997 மகளிர் உலகக் கோப்பையில் பெங்களூருவில் தெனாப்பிரிக்காவுக்கு எதிராக இதே ஆஸ்திரேலியா 164 ரன்களை விக்கெட் விடாமல் சேசிங் செய்ததே முந்தைய சாதனை. இதையும் சேர்த்து நடப்பு உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா 5 போட்டிகளில் 4 வெற்றிகள் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: இந்த மாதிரி ஈஸி வாய்ப்பை விடாத சுதர்சன்.. இல்லனா இதையே வெச்சு கழற்றி விடுவாங்க.. ஸ்ரீகாந்த் அட்வைஸ்

ஒரு போட்டி மழையால் முடிந்தது. அதனால் 9 புள்ளிகளைப் பெற்றுள்ள ஆஸ்திரேலியா நடப்பு உலகக் கோப்பையின் அரையிறுதி சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்று தங்களை உலக சாம்பியன் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. மறுபுறம் போராடமலேயே தோற்ற வங்கதேசம் 4வது தோல்வியைச் சந்தித்தது.

Advertisement