INDvsZIM : தினேஷ் கார்த்திகை வெளியேற்றிய கேப்டன் ரோஹித் – பிளேயிங் லெவனில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Rohit-Sharma
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது இதுவரை சூப்பர் 12 சுற்றில் நடைபெற்று முடிந்துள்ள நான்கு ஆட்டங்களில் மூன்று வெற்றிகளை பெற்று ஆறு புள்ளிகளுடன் தற்போது புள்ளி பட்டியலில் இரண்டாம் இடம் வகிக்கிறது. இந்நிலையில் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான முக்கியமான கடைசி சூப்பர் 12 ஆட்டம் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் சற்று முன்னர் துவங்கியது.

IND-vs-ZIM

- Advertisement -

இந்த கடைசி போட்டியில் இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் 8 புள்ளிகள் பெற்று குரூப் இரண்டில் முதல் அணியாக அரையிறுதிக்கு செல்லும். இந்த போட்டியின் முடிவினை பொருத்தே இந்திய அணி அரையிறுதி போட்டியில் யாருடன் விளையாடும் என்பது உறுதியாகும். எனவே இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

ஏற்கனவே இந்திய அணி தங்களது அரையிறுதி வாய்ப்பினை உறுதி செய்துள்ளதால் இந்த இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான இந்த போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஏதாவது மாற்றம் இருக்குமா என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் அணியில் ஒரு முக்கிய அதிரடி மாற்றத்தை செய்து ரோகித் சர்மா அதிரடி காட்டியுள்ளார்.

DK and Pant

அந்த வகையில் இந்த டி20 உலக கோப்பை தொடர் முழுவதுமே பேட்டிங்கில் அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட தினேஷ் கார்த்திக் தொடர்ந்து சொதப்பி வந்ததன் காரணமாக இன்றைய போட்டியில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக அணியில் வாய்ப்பின்றி தவித்து வந்த ரிஷப் பண்ட்டிற்கு விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனாக இன்றைய போட்டியில் ரோகித் சர்மா வாய்ப்பு வழங்கியுள்ளார்.

- Advertisement -

இந்த ஒரு மாற்றத்தை தவிர்த்து இந்திய அணியில் வேறெந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இருப்பினும் அரையிறுதியில் தினேஷ் கார்த்திக்கே இந்திய அணியில் விளையாட அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அதன்படி இன்றைய ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : PAK vs BAN : கடவுளின் கருணையால் அரையிறுதிக்கு முன்னேறிய பாகிஸ்தான் – அதுக்குன்னு இவ்வளவு அதிர்ஷ்டமா?

1) ரோஹித் சர்மா, 2) கே.எல் ராகுல், 3) விராட் கோலி, 4) சூரியகுமார் யாதவ், 5) ரிஷப் பண்ட், 6) ஹார்டிக் பாண்டியா, 7) அக்சர் படேல், 8) ரவிச்சந்திரன் அஷ்வின், 9) புவனேஷ்வர் குமார், 10) முகமது ஷமி, 11) அர்ஷ்தீப் சிங்.

Advertisement