PAK vs BAN : கடவுளின் கருணையால் அரையிறுதிக்கு முன்னேறிய பாகிஸ்தான் – அதுக்குன்னு இவ்வளவு அதிர்ஷ்டமா?

Pak vs BAn
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் குரூப் 1 பிரிவிலிருந்து ஏற்கனவே நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் செமி ஃபைனலுக்கு தகுதி பெற்ற நிலையில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா வெளியேறியது. அந்த நிலையில் குரூப் 2 பிரிவில் தகுதி பெறும் அணிகளை தீர்மானிக்கும் முக்கியமான 3 போட்டிகள் நவம்பர் 6ஆம் தேதியன்று நடைபெற்றது. அதில் அதிகாலை 5.30 மணிக்கு நடைபெற்ற 40வது லீக் போட்டியில் ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பை இழந்த நெதர்லாந்தை நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய வலுவான தென்னாபிரிக்கா எளிதாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அடிலெய்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் மிகப்பெரிய ட்விஸ்ட் போல காலம் காலமாக உலகக் கோப்பைகளில் முக்கிய போட்டிகளில் சொதப்பும் தென்னாப்பிரிக்கா நெதர்லாந்து நிர்ணயித்த 159 ரன்களை சேசிங் செய்ய முடியாமல் 13 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அதனால் தன்னை மீண்டும் ஒருமுறை தன்னை “சோக்கர்” என்று நிரூபித்த தென்னாப்ப்ரிக்கா வெளியேறிய அதிர்ஷ்டம் கதை முடிந்ததாக கருதப்பட்ட பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு மிகப்பெரிய புத்துயிர் கொடுத்தது. ஏனெனில் தலா 4 புள்ளிகளுடன் 3 மற்றும் 5வது இடங்களில் இருந்த அந்த அணி அதே மைதானத்தில் காலை 8.30 மணிக்கு தொடங்கிய 41வது போட்டியில் வென்றால் அரை இறுதிக்கு செல்லலாம் என்ற அதிர்ஷ்டமான வாய்ப்பை பெற்றன.

- Advertisement -

சொதப்பிய வங்கதேசம்:
அந்த நிலையில் துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தாலும் 20 ஓவரில் 127/8 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிலும் அந்த அணிக்கு தொடக்க வீரர் சாண்டோ அதிகபட்சமாக 7 பவுண்டரியுடன் 54 (48) ரன்கள் எடுத்ததால் முதல் 10 ஓவரில் 70 ரன்களை எடுத்த அந்த அணி அடுத்த 10 ஓவரில் மடமடவென 7 விக்கெட்டுகளை இழந்து வெறும் 57 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அந்தளவுக்கு கடைசி கட்ட ஓவர்களில் துல்லியமாக பந்து வீசிய பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஷாகின் அப்ரிடி 4 விக்கெட்களை எடுத்தார். அதைத்தொடர்ந்து 128 ரன்கள் துரத்திய பாகிஸ்தானுக்கு 0 ரன்களில் இருந்தபோது முகமது ரிஸ்வான் கொடுத்த அழகான கேட்சை வங்கதேசம் கோட்டை விட்டது. அதை பயன்படுத்திய பாகிஸ்தான் 57 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த போது எதிர்ப்புறம் தடவலான பேட்டிங்கை வெளிப்படுத்திய கேப்டன் பாபர் அசாம் 25 (32) ரன்களில் அவுட்டாக அடுத்த ஓவரிலேயே முகமது ரிஸ்வான் 32 (32) ரன்களில் அவுட்டானார்.

- Advertisement -

அப்போது வந்த முகமது நவாஸ் 4 (11) ரன்களில் ரன் அவுட்டானதால் பரபரப்பு ஏற்பட்டாலும் கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய முகமது ஹாரிஸ் 1 பவுண்டர் 2 சிக்சரை பறக்கவிட்டு 31 (18) ரன்களை விளாசி வெற்றி உறுதி செய்து ஆட்டமிழந்தார். இருப்பினும் ஷான் மசூட் 24* (14) ரன்கள் குவித்ததால் 18.1 ஓவரிலேயே 128/5 ரன்களை எடுத்த பாகிஸ்தான் 5 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது.

முன்னதாக இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளிடம் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து கிண்டல்களுக்கும் விமர்சனத்திற்கும் உள்ளான பாகிஸ்தான் மனம் தளராமல் அதற்கடுத்த 2 போட்டிகளில் வென்று அதிர்ஷ்டத்தை எதிர்நோக்கி கடவுளை வேண்டி காத்திருந்தது. அவர்களது எண்ணம் போலவே கடைசி நேர ட்விஸ்ட் போல இறுதியில் யாருமே எதிர்பாராத வகையில் தென்னாப்பிரிக்காவை நெதர்லாந்து தோற்கடித்ததால் கையில் கிடைத்த அதிர்ஷ்டத்தை கொஞ்சமும் வீணடிக்காமல் வங்கதேசத்தை தோற்கடித்து பயன்படுத்திய பாகிஸ்தான் இந்த உலகக்கோப்பையின் அரையிறுதிக்கு 4வது அணியாக தகுதி பெற்றுள்ளது.

அப்படி ஒரு கட்டத்தில் கதை முடிந்ததாக கருதப்பட்ட பாகிஸ்தான் உள்ளே நுழைந்ததை பார்க்கும் போது கடவுளே அந்த அணி அரை இறுதிக்குள் நுழைய அதிர்ஷ்டத்தை அள்ளி அள்ளி வழக்கியது போல் தோன்றுகிறது. அதைவிட கடந்த 1992ஆம் ஆண்டு இம்ரான் கான் தலைமையில் இதே ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த உலகக் கோப்பையில் இதே போல் ஆரம்பத்தில் தோல்விகளை சந்தித்தாலும் அதற்காக மனம் தளராமல் பின்னர் கொதித்தெழுந்த பாகிஸ்தான் அடுத்தடுத்த வெற்றிகளால் இறுதியில் கோப்பையையும் வென்று சரித்திரம் படைத்தது.

அதனால் கடவுளின் நேரடி ஆசிர்வாதத்துடன் 1992 போல் மீண்டும் தங்களது அணி சாம்பியன் பட்டம் வெல்லப் போகிறது என்று பாகிஸ்தான் ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். மறுபுறம் கடைசி நேரத்தில் கிடைத்த வாய்ப்பிலும் சொதப்பிய வங்கதேசம் பரிதாபமாக வெளியேறியது.

Advertisement