வெஸ்ட்இண்டீஸ்க்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கும் உத்தேச இந்திய அணி இதோ

ind
- Advertisement -

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட்இண்டிஸ் அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் விளையாட உள்ளது. இதில் முதலாவதாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் பிப்ரவரி 6, 9, 12 ஆகிய தேதிகளில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக விளங்கும் அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் ரசிகர்கள் அனுமதியின்றி நடைபெற உள்ளது.

INDvsWI

- Advertisement -

பிப்ரவரி 6ஆம் தேதி மதியம் 1.30 மணிக்கு துவங்கும் இந்த தொடரின் முதல் ஒருநாள் போட்டியை ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் ஆப் வாயிலாக நேரடியாக கண்டு களிக்கலாம். முதல் போட்டியிலேயே வெற்றி பெற்று இந்த ஒருநாள் தொடரில் முன்னிலை பெற இரு அணிகளைச் சேர்ந்த வீரர்களும் தீவிரமாக போராடுவார்கள் என்பதால் இந்த போட்டி ரசிகர்களுக்கு விருந்து மழை படைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

உத்தேச இந்திய அணி:
சரி நாளை நடைபெற உள்ள முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கப்போகும் உத்தேச இந்திய அணியை பற்றி விவாதிப்போம்.

Rohith

ஓப்பனிங்: இந்த ஒருநாள் தொடரில் காயத்திலிருந்து மீண்டுள்ள கேப்டன் ரோகித் சர்மா முதல் தொடக்க வீரராக களமிறங்குவார் என்பதில் சந்தேகமே வேண்டாம். அவருக்கு ஜோடியாக துணை கேப்டன் கேஎல் ராகுல் முதல் ஒருநாள் போட்டியில் ஓய்வு எடுப்பதால் அவருக்கு பதில் இஷான் கிசான் களமிறங்குவார் என ரோஹித் அறிவித்துள்ளார். ஏனெனில் அந்த இடத்தில் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட ஷிகர் தவான் மற்றும் ருதுராஜ் கைக்வாட் ஆகியோர் தனிமை படுத்தப்பட்டுள்ளார்கள்.

- Advertisement -

மிடில் ஆர்டர்: 3வது இடத்தில் எந்தவித சந்தேகமும் இன்றி நட்சத்திர வீரர் விராட் கோலி விளையாடுவார். சமீபத்திய தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடரில் அசத்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் இம்முறை 4வது இடத்தில் பேட்டிங் செய்தால் இந்தியாவிற்கு சாதகமாக இருக்கும். 5வது இடத்தில் சூரியகுமார் யாதவ் விளையாட தகுதியானவராக இருக்கிறார்.

Thakur

ஆல் ரவுண்டர்கள்: ஆல் ரவுண்டர்களாக முதல் முறையாக இந்திய அணியில் இடம்பிடித்துள்ள தீபக் ஹூடாவுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் ஷார்துல் தாகூர் விளையாடுவார்.

- Advertisement -

அதேபோல் மற்றொரு ஆல்-ரவுண்டராக தமிழகத்தின் சுழல்பந்து வீச்சாளர் வாசிங்டன் சுந்தர் விளையாடுவார் என எதிர்பார்க்கலாம். ஏனென்றால் நீண்ட நாட்கள் கழித்து இந்திய அணியில் இடம்பிடித்துள்ள குல்தீப் யாதவை விட இவர் பேட்டிங்கில் கணிசமான ரன்கள் அடிக்கும் திறமை பெற்றுள்ளார்.

siraj

பவுலர்கள்: இந்த அணியில் முதன்மை சுழல் பந்து வீச்சாளராக யூஸ்வென்ற சஹால் இடம் பிடிப்பார் என நம்பலாம். வேகப்பந்து வீச்சாளர்களாக தீபக் சாஹர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்னா ஆகியோர் விளையாட தகுதியானவர்களாக காணப்படுகிறார்கள்.

இதையும் படிங்க : மாயங்க் அகர்வாலுக்கு போட்டியாக மற்றொரு ஓப்பனரை அணியில் இணைத்த பி.சி.சி.ஐ – விவரம் இதோ

வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கும் உத்தேச இந்திய அணி இதோ:
ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷான், விராட் கோலி, ரிஷப் பண்ட் (கீப்பர்), சூரியகுமார் யாதவ், தீபக் ஹூடா/ஷார்துல் தாகூர், வாஷிங்டன் சுந்தர், தீபக் சஹர், முஹமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சஹால்

Advertisement