- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஆசியகோப்பை : பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச பட்டியல்

ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று (ஆகஸ்ட் 27-ஆம் தேதி) 15-வது ஆசிய கோப்பை தொடரானது துவங்கி உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியாக இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதவிருக்கின்றன. ஆசிய கண்டத்தினை சேர்ந்த இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் என ஆறு அணிகள் இந்த தொடரில் பங்கேற்றுள்ளன.

எனவே இந்த ஆசிய கோப்பை தொடரை எந்த அணி கைப்பற்ற போகிறது என்பது குறித்த எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வரும் வேளையில் அடுத்ததாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற உள்ளது.

- Advertisement -

இந்த இந்தியா பாகிஸ்தான் போட்டியின் மீது தான் தற்போது உலக கிரிக்கெட் ரசிகர்களின் பார்வை இருக்கிறது என்றால் அது மிகையல்ல. அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் இந்தப் போட்டி பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. ஏற்கனவே பாகிஸ்தான் அணியில் காயம் காரணமாக ஷாஹீன் அப்ரிடி மற்றும் வாசிம் ஆகியோர் விலகி உள்ளதால் அந்த அணியின் பந்துவீச்சு சற்று பின்னடைவை சந்தித்துள்ளது.

அதே வேளையில் இந்திய அணியில் பலமான வீரர்கள் பலர் இருப்பதனால் நிச்சயம் இந்த முதலாவது போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்த போட்டியில் விளையாடப்போகும் இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்த உத்தேச பட்டியலை தான் நாங்கள் இங்கே உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம். அதன்படி பாகிஸ்தான் அணிக்கெதிரான முதல் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : ஆசிய கோப்பை : பாகிஸ்தானை ஆளும் கோலி – கண்டாலே அலறும் ரோஹித், வரலாற்று புள்ளிவிவரம் இதோ

1) ரோஹித் சர்மா, 2) கே.எல் ராகுல், 3) விராட் கோலி, 4) சூரியகுமார் யாதவ், 5) ரிஷப் பண்ட், 6) ஹார்டிக் பாண்டியா, 7) ஜடேஜா, 8) அஷ்வின், 9) புவனேஷ்வர் குமார், 10) அர்ஷ்தீப் சிங், 11) யுஸ்வேந்திர சாஹல்.

- Advertisement -
Published by