ஆசிய கோப்பை : பாகிஸ்தானை ஆளும் கோலி – கண்டாலே அலறும் ரோஹித், வரலாற்று புள்ளிவிவரம் இதோ

Rohith
- Advertisement -

வரலாற்றுச் சிறப்புமிக்க ஆசிய கோப்பை 15ஆவது முறையாக ஆகஸ்ட் 27ஆம் தேதியான இன்று ஐக்கிய அரபு நாடுகளில் துவங்கியது. இன்று நடைபெறும் முதல் போட்டியில் இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதினாலும் ஆகஸ்ட் 28ஆம் தேதியன்று இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் போட்டிக்கு தான் உலக அளவிலான எதிர்பார்ப்பு நிலவுகிறது. அண்டை நாடுகளான இவ்விரு அணிகளும் மோதும் போட்டிகளில் அனல் பறக்கும் என்பதுடன் கடைசியாக இதே துபாயில் மோதிய போது உலக கோப்பையில் முதல் முறையாக இந்தியாவை தோற்கடித்த பாகிஸ்தான் 1992 முதல் தொடர்ச்சியாக சந்தித்து வந்த தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து புதிய வரலாறு படைத்தது.

Babar Azam Rohit Sharma IND vs PAK

- Advertisement -

மறுபுறம் தரமான வீரர்கள் இருந்தும் தலை குனியும் தோல்வியை சந்தித்த இந்தியா அதற்கு தக்க பதிலடி கொடுக்க இம்முறை ரோகித் சர்மா தலைமையில் களமிறங்குகிறது. கடந்த உலகக் கோப்பைக்கு பின் முழுநேர கேப்டனாக பதவியேற்ற அவரது தலைமையில் பங்கேற்ற அத்தனை தொடர்களிலும் வென்று வரும் இந்தியா இம்முறை நிச்சயம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெல்லுமா இந்தியா:
மேலும் ஏற்கனவே 7 ஆசிய கோப்பைகளை வென்று கடைசியாக கடந்த 2018இல் நடைபெற்ற ஆசிய கோப்பையில் ரோகித் சர்மா தலைமையில் சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா நடப்பு சாம்பியனாக வலுவான அணியாக களமிறங்குகிறது. இந்த தொடரில் நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷல் படேல் ஆகியோர் காயத்தால் விலகியுள்ளதால் பேட்டிங் துறையில் இருப்பவர்கள் வெற்றிக்கு கூடுதல் பொறுப்புடன் செயல்பட வேண்டியுள்ளது.

rohith

குறிப்பாக இரட்டை குழல் துப்பாக்கிகளாக உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்களாக முன்னாள் இந்நாள் கேப்டன்களாக திகழும் விராட் கோலியும் ரோகித் சர்மாவும் சீனியர் பேட்ஸ்மேன்கள் என்ற முறையில் மிகச் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியமாகியுள்ளது. இதில் 2019க்குப்பின் தனது தரத்திற்கு சதமடிக்காமல் சுமாரான பார்மில் விமர்சனங்களால் தவித்து வரும் விராட் கோலி அதை உடைப்பதற்கு இந்த தொடரில் சிறப்பாக செயல்பட வேண்டியது கட்டாயமாகியுள்ளது.

- Advertisement -

அலறும் ரோஹித்:
மறுபுறம் 2019க்குப்பின் அவ்வப்போது சதமும் அரை சதம் அடித்தாலும் ரோகித் சர்மாவும் தன்னுடைய முழு பார்மில் பெரிய அளவில் ரன்களை சேர்க்கவில்லை என்ற பேச்சுக்கள் இருந்து வருகிறது. எனவே பாகிஸ்தானுக்கு எதிரான இப்போட்டியில் சிறப்பாக செயல்பட்டு அந்த பேச்சுகளை அவர்கள் பொய்யாக்குவார்களா என்பதே அவர்களது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்நிலையில் இந்த வருடம் ஆசிய கோப்பை 20 ஓவர் தொடராக நடைபெறும் நிலையில் வரலாற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற டி20 போட்டிகளில் ரோகித் சர்மா படுமோசமாக செயல்பட்டுள்ளார் என்பது அவரது ரசிகர்களுக்கு வியப்பாக அமைகிறது.

Rohith

1. ஆம் பாகிஸ்தானுக்கு எதிராக வரலாற்றில் இதுவரை பங்கேற்ற 6 போட்டிகளில் அவர் முறையே 30*, 2, 4*, 24, 10, 0 என வெறும் 70 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். 2007இல் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை இறுதி போட்டியில் முக்கியமான 30* ரன்கள் எடுத்தது தவிர கடந்த 14 வருடங்களில் அவர் எந்த போட்டியிலும் 30 ரன்களை கூட தாண்டவில்லை.

- Advertisement -

2. குறிப்பாக கடந்த 2021 டி20 உலக கோப்பையில் டக் அவுட்டான அவர் இந்தியாவின் சரித்திர தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தார். அந்த வகையில் பாகிஸ்தானை கண்டாலே அலறும் வகையில் செயல்படும் அவருக்கு கடந்த வருடம் தன்னை டக் அவுட்டாக்கிய சாஹீன் அப்ரிடி இம்முறை இல்லாதது உண்மையாகவே சற்று ஆறுதலான செய்தியாகும்.

Virat Kohli IND vs PAK

ஆளும் விராட்:
மறுபுறம் டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தானை விராட் கோலி காலம் காலமாக தெறிக்கவிட்டு வருகிறார் என்றே கூறலாம். ஏனெனில் வரலாற்றில் பாகிஸ்தானை 7 போட்டிகளில் எதிர்கொண்ட அவர் அதில் 3 அரை சதங்கள் உட்பட 311 ரன்ளை 118.25 என்ற நல்ல ஸ்டிரைக் ரேட்டில் வெளுத்து வாங்கியுள்ளார்.

- Advertisement -

1. இதன் வாயிலாக பாகிஸ்தானுக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த இந்திய பேட்ஸ்மேனாகவும் அவர் சாதனை படைத்துள்ளார். அவரை தவிர வேறு யாரும் 200 ரன்களை கூட தொட்டதில்லை என்ற நிலைமையில் 2வது இடத்தில் யுவராஜ் சிங் வெறும் 155 ரன்களுடன் உள்ளார். அத்துடன் அதிகபட்சமாக 3 ஆட்ட நாயகன் விருதுகளையும் வென்றுள்ளார்.

pakisthan IND vs PAK

2. மேலும் உலகிலேயே டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக அதிகபட்ச பேட்டிங் சராசரியை (77.5) கொண்டுள்ள வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். அத்துடன் டி20 கிரிக்கெட், ஆசிய கோப்பை மற்றும் உலககோப்பை ஆகிய தொடர்களை சேர்த்து சச்சினையும் மிஞ்சும் வகையில் பாகிஸ்தானுக்கு எதிராக அதிகபட்சமாக 5 ஆட்ட நாயகன் விருதுகளை விராட் கோலி வென்றுள்ளார்.

இதையும் படிங்க : IND vs PAK : நாளைய போட்டியில் முதல் இந்திய வீரராக மாபெரும் சாதனையை நிகழ்த்தவுள்ள – விராட் கோலி

3. அதேபோல் வரலாற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாடிய 9 டி20 போட்டிகளில் விராட் கோலி 5 முறை அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளார். இதர இந்திய வீரர்கள் சேர்த்து எஞ்சிய 4 போட்டிகளில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளனர்.

Advertisement