IND vs PAK : நாளைய போட்டியில் முதல் இந்திய வீரராக மாபெரும் சாதனையை நிகழ்த்தவுள்ள – விராட் கோலி

Kohli
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி கடந்த சில தொடர்களாகவே பேட்டிங்கில் பெரிய அளவு தடுமாற்றத்தை சந்தித்து வருவதால் அவரது இடம் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருகிறது. அதோடு நடைபெற்று முடிந்த இங்கிலாந்து தொடரில் இந்திய அணி வென்றிருந்தாலும் தனிப்பட்ட முறையில் விராட் கோலியின் பேட்டிங் படுமோசமாக அமைந்ததால் அவருக்கு வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் ஓய்வளிக்கப்பட்டது.

Kohli

- Advertisement -

இப்படி சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலிக்கு வலுக்கட்டாயமாக ஓய்வு அளிக்கப்பட்டது ரசிகர்கள் மத்தியில் பெரிய வருத்தத்தையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் ஒரு போதிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஆசியக் கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள விராட் கோலி இந்த தொடரில் மீண்டும் பார்மிற்கு வந்து டி20 உலக கோப்பையில் அசத்த வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

இந்நிலையில் நாளை ஆகஸ்ட் 28-ஆம் தேதி துபாய் மைதானத்தில் நடைபெற இருக்கும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் விளையாடவுள்ள விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்த காத்திருக்கிறார். அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணிக்காக கடந்து 2008 ஆம் ஆண்டு அறிமுகமான விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் 102 போட்டிகளிலும், ஒரு நாள் கிரிக்கெட்டில் 262 போட்டிகளிலும் விளையாடி உள்ளார்.

Virat Kohli IND vs PAK

அதே வேளையில் டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரை 2009 ஆம் ஆண்டு அறிமுகமாகி இதுவரை 99 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். நாளை பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கோலி களமிறங்கும் போது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் நூறாவது போட்டியில் விளையாடுவார்.

- Advertisement -

இப்படி இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டின் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் 100 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை நாளைய போட்டியில் கோலி படைக்க இருக்கிறார். மூன்று விதமான போட்டிகளிலும் 100 ஆட்டங்கள் விளையாடுவது என்பது சாதாரண விடயம் கிடையாது. இதற்கு முன்னதாக நியூசிலாந்தை சேர்ந்த ராஸ் டைலர் இந்த சாதனையை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கடந்த 10 வருடத்தில் இதுமாதிரி நடந்ததே இல்ல – வேதனையுடன் விவரிக்கும் விராட் கோலி

இந்திய அணிக்காக இதுவரை 99 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 50.12 சராசரியுடன் 3308 ரன்களை குவித்துத்துள்ளார். இதில் 30 அரைசதங்களும் அதிகபட்சமாக 94 ரன்களும் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement