- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் டி20 போட்டியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச பட்டியல் இதோ

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது ஜனவரி 22-ஆம் தேதி இன்று முதல் துவங்கி நடைபெற இருக்கிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டியானது இன்று இரவு 7 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் :

கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரை கைப்பற்றிய இந்திய அணியானது அடுத்ததாக தற்போது சூரியகுமார் யாதவ் தலைமையில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறது. தொடர்ச்சியாக டி20 கிரிக்கெட் ஆதிக்கம் செலுத்தி வரும் இந்திய அணி இந்த தொடரிலும் தங்களது சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் இன்று இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியின் ப்ளேயிங் லெவன் எவ்வாறு இருக்கும்? என்பது குறித்த உத்தேச பட்டியலை இங்கு காணலாம். அந்த வகையில் இன்றைய போட்டிக்கான துவக்க வீரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் விளையாடுவார்கள்.

மூன்றாவது இடத்தில் வழக்கம்போல் அதிரடி ஆட்டக்காரர் திலக் வர்மாவும், நான்காவது இடத்தில் கேப்டன் சூரியகுமார் யாதவும் விளையாடுவார்கள். 5 மற்றும் 6-வது இடங்களில் ஹார்டிக் பாண்டியா மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் இடம் பெறுவது உறுதி.

- Advertisement -

ஏழாவது இடத்தில் அக்சர் பட்டேலும் 8 மற்றும் 9 ஆகிய இடங்களில் அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னாய் ஆகியோர் இடம் பிடிப்பார்கள். கடைசி இரண்டு இடங்களில் வருண் சக்கரவர்த்தி மற்றும் முகமது ஷமி ஆகியோர் இடம் பிடிப்பார்கள் என்று தெரிகிறது. அந்த வகையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : 110% கொடுக்கிறேன்.. 150 கி.மீ பந்தை பற்றி தெரியாத ரசிகர்கள் பேசுனதை தாங்க முடியல.. ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டி

1) அபிஷேக் சர்மா, 2) சஞ்சு சாம்சன், 3) திலக் வர்மா, 4) சூரியகுமார் யாதவ், 5) ஹார்டிக் பாண்டியா, 6) ரிங்கு சிங், 7) அக்சர் படேல், 8) அர்ஷ்தீப் சிங், 9) ரவி பிஷ்னாய், 10) வருண் சக்ரவர்த்தி, 11) முகமது ஷமி.

- Advertisement -