
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஆனது தற்போது கொழும்பு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி இலங்கை அணியை 38 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது மட்டுமின்றி தொடரிலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2வது டி20 போட்டி இன்று நடைபெற இருக்கிறது.
இந்த போட்டிக்கான இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் இடம் பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் காணப்படுகிறது. ஏனெனில் கடந்த போட்டியில் தொடக்க வீரராக அறிமுகமான பிரித்வி ஷா முதல் பந்திலேயே டக் அவுட் ஆனதால் அவருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா ? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட க்ருனால் பாண்டியாவுக்கு பதிலாக யார் விளையாடுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
இந்நிலையில் இன்றைய போட்டியிலும் ப்ரித்வி ஷா அணியில் தொடர்வார் என்றே தெரிகிறது. ஏனெனில் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளதால் அந்த பாதையை அப்படியே பின்பற்றும் மேலும் இந்த போட்டியிலும் வெற்றி பெறும் பட்சத்தில் அடுத்த போட்டிக்கான அணியில் மாற்றம் இருக்கும் என்பதனால் இன்றைய போட்டியில் எந்த மாற்றமும் இருக்காது. அணியில் ஒரு மாற்றமாக க்ருனால் பாண்டியாவிற்கு பதிலாக ஒரு வீரர் மட்டுமே மாற்றப்பட வாய்ப்புள்ளது.
இதனால் முதல் போட்டியில் வாய்ப்பு கிடைக்காத துவக்க வீரர்கள் படிக்கல் மற்றும் கெய்க்வாய்ட்க்கு இன்றும் இடம் கிடைக்காது என்று கூறப்படுகிறது. இன்றைய போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் உத்தேச அணி இதோ :
1) ப்ரித்வி ஷா, 2) ஷிகார் தவான், 3) சஞ்சு சாம்சன், 4) இஷான் கிஷன் 5) சூரியகுமார் யாதவ், 6) ஹார்டிக் பாண்டியா, 7) ராகுல் சாகர், 8) புவனேஷ்வர் குமார், 9) தீபக் சாகர், 10) சாஹல், 11) வருண் சக்ரவர்த்தி