- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஒரு மாற்றத்துடன் இரண்டாவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச பட்டியல் இதோ

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதலாவது டி20 போட்டியில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 48 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

2 ஆவது போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது இன்று ஜனவரி 23-ஆம் தேதி ராய்ப்பூர் நகரில் இரவு 7 மணிக்கு துவங்க இருக்கிறது. இதன் காரணமாக தற்போது இரு அணிகளை சார்ந்த வீரர்களும் அங்கு தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஏதாவது மாற்றங்கள் இருக்குமா? என்று எதிர்பார்க்கப்படும் வேளையில் அணியில் ஒரு மாற்றம் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. முதல் போட்டியில் இந்திய அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியும் பெற்றுள்ளது.

இதன் காரணமாக இரண்டாவது போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் பெரிய மாற்றங்கள் இருக்காது என்றும் பெரும்பாலும் முதல் போட்டியில் விளையாடிய அதே வீரர்கள் விளையாடுவார்கள் என்றும் கூறப்படுகிறது. ஆனாலும் முதல் போட்டியின் போது கை விரலில் காயமடைந்த அக்ஸர் பட்டேலுக்கு இந்த போட்டியில் ஓய்வு கொடுத்து அவருக்கு பதிலாக குல்தீப் யாதவ் விளையாடலாம் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

அதை தவிர்த்து இரண்டாவது போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் பெரிய மாற்றங்கள் இருக்காது என்றும் தெரிகிறது. அதன்படி இரண்டாவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : அபிஷேக் சர்மா ஆடுறார்னு தெரிஞ்சா டிவியை ஆன் பண்ணுவீங்க.. அந்த பையன் ஸ்பெஷல் – ரவி சாஸ்திரி புகழாரம்

1) அபிஷேக் சர்மா, 2) சஞ்சு சாம்சன், 3) இஷான் கிஷன், 4) சூரியகுமார் யாதவ், 5) ஹார்டிக் பாண்டியா, 6) ஷிவம் துபே, 7) ரிங்கு சிங், 8) குல்தீப் யாதவ், 9) அர்ஷ்தீப் சிங், 10) ஜஸ்ப்ரீத் பும்ரா, 11) வருண் சக்கரவர்த்தி.

- Advertisement -