- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் – பிளேயிங் லெவன் இதுதான்

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி கொல்கத்தா நகரில் கடந்த 22-ஆம் தேதி நடைபெற்று முடிந்த வேளையில் அந்த போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியிருந்தது.

இரண்டாவது டி20 போட்டிக்கான பிளேயிங் லெவன் :

இதன் மூலம் இந்திய அணி இந்த தொடரின் தற்போதைய நிலையில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகித்துள்ளது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது இன்று ஜனவரி 25-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

- Advertisement -

இந்த இரண்டாவது டி20 போட்டிக்கான இந்திய அணி ஏற்கனவே சென்னை வந்தடைந்து தீவிர வலைப்பயிற்சியினை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இன்றைய இரண்டாவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்கும்? என்பதை இங்கு காணலாம்.

அந்த வகையில் கடந்த போட்டியை போன்றே இந்த போட்டியிலும் துவக்க வீரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் களமிறங்குவார்கள். மூன்றாவது இடத்தில் வழக்கம்போல திலக் வர்மாவும், நான்காவது சூரியகுமார் யாதவும் விளையாடுவார்கள். ஐந்தாவது மற்றும் ஆறாவது இடத்தில் ஹார்டிக் பாண்டியா மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் விளையாடுவது உறுதி.

- Advertisement -

ஏழாவது இடத்தில் அக்சர் பட்டேலும், எட்டாவது இடத்தில் நிதீஷ் ரெட்டியும் விளையாடுவார்கள். அதேபோன்று எஞ்சியுள்ள மூன்று இடங்களில் அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னாய் அல்லது முகமது ஷமி ஆகியோர் ஒருவர் இடம் பெறுவது உறுதி. அந்த வகையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : ஏற்கனவே 3 பேர்.. இதுல சாம்சன் சிலபஸ் வெளியே வந்துட்டாரு.. ருதுராஜ்க்கு வாய்ப்பு கிடைக்காத காரணம் பற்றி அஸ்வின்

1) அபிஷேக் சர்மா, 2) சஞ்சு சாம்சன், 3) திலக் வர்மா, 4) சூரியகுமார் யாதவ், 5) ஹார்டிக் பாண்டியா, 6) ரிங்கு சிங், 7) அக்சர் படேல், 8) நிதீஷ் ரெட்டி, 9) அர்ஷ்தீப் சிங், 10) வருண் சக்ரவர்த்தி, 11) முகமது ஷமி/ரவி பிஷ்னாய்.

- Advertisement -