IND vs WI : ஒன்னு இல்ல. ரெண்டு இல்ல. ஏகப்பட்ட மாற்றங்களுடன் களமிறங்கிய இந்திய அணி – இத்தனை மாற்றமா?

IND vs WI Nicholas Pooran Rohit Sharma
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முடிந்த நான்கு போட்டிகளின் முடிவில் இந்திய அணியானது மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் ஏற்கனவே தொடரை கைப்பற்றியதால் அணியில் பல்வேறு மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

McCoy

- Advertisement -

அதன்படி இன்று இவ்விரு அணிகளுக்கும் இடையே ஃப்ளோரிடோ நகரில் துவங்கியுள்ள ஐந்தாவது போட்டிக்கான இந்திய அணியில் நான்கு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. நடைபெற்று முடிந்த டாசிற்கு பிறகு டாசை வென்ற இந்திய அணியானது முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.

இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வு எடுத்துக் கொண்டதால் ஹார்டிக் பாண்டியா இந்திய அணியின் கேப்டனாக செயல்படுகிறார். மேலும் இந்த போட்டியில் அவரோடு சேர்த்து சூரியகுமார் யாதவ், ரிஷப் பண்ட் மற்றும் புவனேஸ்வர் குமார் என 4 வீரர்கள் அணியிலிருந்து வெளியேறி உள்ளனர்.

ishan kishan

அவர்களுக்கு பதிலாக இந்த தொடரில் இதுவரை விளையாடாத இஷான் கிஷன், குல்தீப் யாதவ் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த போட்டியில் விளையாடாத ஷ்ரேயாஸ் ஐயர் மீண்டும் இன்றைய போட்டிக்கான அணியில் துவக்க வீரராக விளையாடுகிறார். அவரை தவிர்த்து ஹார்டிக் பாண்டியாவும் மீண்டும் கேப்டனாக அணியில் இணைந்துள்ளார். இப்படி ஒரே போட்டியில் இந்திய அணியில் ஏகப்பட்ட மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது சற்று குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது என்று கூறலாம்.

- Advertisement -

ஏனெனில் எந்தெந்த வீரர்கள் அணியில் இருக்கிறார்கள் யார்? யார்? இடம் பெறவில்லை என்று யோசிக்க முடியாத அளவிற்கு அத்தனை வீரர்கள் இந்திய அணியில் மாறி மாறி விளையாடி வருகின்றனர். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : கிரிக்கெட் வீரர்களும் மனிதர்களே, அவர்களுக்கும் ரெஸ்ட் தேவை – விராட் கோலிக்கு ஆதரவளிக்கும் அவரின் பாட்னர்

1) இஷான் கிஷன், 2) ஷ்ரேயாஸ் ஐயர், 3) சஞ்சு சாம்சன், 4) ஹார்டிக் பாண்டியா, 5) தீபக் ஹூடா, 6) தினேஷ் கார்த்திக், 7) அக்சர் பட்டேல், 8) குல்தீப் யாதவ், 9) ஆவேஷ் கான், 10) ரவி பிஷ்னோய், 11) அர்ஷ்தீப் சிங்

Advertisement