மீண்டும் ஏமாற்றம் அளித்த கோலியின் தேர்வு. அணியில் ஒரு மாற்றம் – ஆனா அஷ்வின் விளையாடல

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் இன்னும் சில நிமிடங்களில் துவங்க உள்ளது. இந்த போட்டிக்கான டாஸ் தற்போது போடப்பட்டது. அதன்படி டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார். அதன்படி தற்போது இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தயாராகி வருகிறது.

Kohli

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியில் டாஸ் போடப்பட்ட பிறகு இந்திய அணியில் உள்ள மாற்றங்கள் குறித்து இந்திய அணி கேப்டன் விராத் கோலி அறிவிக்கையில் : இந்த 4 ஆவது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனில் 2 வீரர்களை மாற்றியுள்ளார். அதன்படி கடந்த போட்டியில் விளையாடிய வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா அணியில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளார்.

இஷாந்த் சர்மாவிற்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் ஷர்துள் தாகூர் அணியில் இணைக்கப்பட்டுள்ளார். அதேபோன்று முகமது ஷமிக்கு பதிலாக உமேஷ் யாதவ் விளையாடுகிறார். ஏற்கனவே இந்த தொடரில் முதல் மூன்று போட்டிகளில் விளையாடாமல் இருந்த தமிழக சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் இன்றைய போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

Thakur 1

இந்நிலையில் மீண்டும் அஷ்வினுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது ரசிகர்களிடையே பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த ஓவல் மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று கூறப்படும் நிலையிலும் அஷ்வினை சேர்க்காதது கோலியின் தவறான முடிவை வெளிக்காட்டுவதாக ரசிகர்கள் கருத்தினை பகிர்ந்து வருகின்றனர்.

ashwin 1

ஏற்கனவே இந்த தொடரில் நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரில் சமநிலை வகிப்பதால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Advertisement