IND vs NZ : இன்றைய முதலாவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – லிஸ்ட் இதோ

IND
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது இன்று (ஜனவரி 27) ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சி நகரில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான இரு அணி வீரர்களும் தற்போது தீவிர பயிற்சியை மேற்கொண்டு வரும் வேளையில் இன்று இரவு ஏழு முப்பது (7.30pm) மணிக்கு இந்த போட்டியானது துவங்க உள்ளது. ஏற்கனவே இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்த நியூசிலாந்து அணியானது இம்முறை டி20 தொடரை கைப்பற்றும் முனைப்போடு களமிறங்க இருக்கிறது.

IND-vs-NZ

- Advertisement -

அதேபோன்று சீனியர்கள் இல்லாமல் முற்றிலும் இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணியானது இந்த தொடரில் பங்கேற்ப இருப்பதினாலும் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் உச்சத்தைத் தொட்டுள்ளது.

இந்நிலையில் இந்த முதலாவது டி20 போட்டிக்கான இந்திய அணியில் எந்தெந்த வீரர்களுக்கு பிளேயர்களுக்கு இடம் கிடைக்கும் என்பது குறித்த உத்தேச பட்டியலை தான் நாங்கள் இங்கே உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம். அதன்படி இன்றைய முதல் டி20 போட்டியில் துவக்க வீரர்களாக சுப்மன் கில் மற்றும் விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் ஆகியோர் துவக்க வீரர்களாக இடம்பெறுவார்கள் என்று தெரிகிறது.

Shubman Gill Ishan Kishan

ஏனெனில் இவர்கள் இருவருமே சிறப்பான ஃபார்மில் இருப்பதால் அவர்களை வெளியேற்ற முடியாது. அதேபோன்று மூன்றாவது இடத்தில் விராட் கோலிக்கு பதிலாக ராகுல் திரிப்பாதி விளையாடுவது உறுதி. நான்காவது இடத்தில் வழக்கம்போல் சூரியகுமார் யாவும் ஐந்தாவது இடத்தில் ஹார்டிக் பாண்டியாவும் ஆறாவது இடத்தில் தீபக் ஹூடாடவும் விளையாட வாய்ப்பு உள்ளது.

- Advertisement -

அதேபோன்று சுழற்பந்து வீச்சாளர்களாக வாஷிங்டன் சுந்தர் மற்றும் யுஸ்வேந்திர சாகல் அல்லது குல்தீப் யாதவ் ஆகிய இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும். வேகப்பந்து வீச்சாளர்களாக சிவம் மாவி, உம்ரான் மாலிக் மற்றும் அர்ஸ்தீப் சிங் ஆகியோர் விளையாடுவார்கள் இதை தவிர பெரிய அளவில் இந்திய அணியில் மாற்றம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : ஆடவர் அணிக்கு பாடம் கற்பித்த இளம் சிங்கப்பெண்கள் அணி – ஐசிசி வில்லனை சாய்த்து உலக கோப்பை ஃபைனலுக்கு தகுதி

அதேபோன்று இந்த தொடரில் ஜித்தேஷ் சர்மா, முகேஷ் குமார். பிரித்வி ஷா இடம் பெற்றிருந்தாலும் அவர்கள் மூவருக்கும் இந்த முதலாவது போட்டியில் வாய்ப்பு கிடைப்பது கஷ்டம் தான் என்றும் தெரிகிறது.

Advertisement