நாளைய முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச பட்டியல் இதோ

Shaw
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நாளை 18ம் தேதி முதல் துவங்க இருக்கிறது. இந்த தொடரின் அனைத்து போட்டிகளும் கொழும்பு பிரம்மதேசா மைதானத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷிகார் தவான் தலைமையிலான இந்திய அணி எவ்வாறு விளையாடப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது.

Dravid

- Advertisement -

அதே போன்று ராகுல் டிராவிட் இந்த இளம் அணியை வழி நடத்துவதால் அவரது தலைமையில் இந்த இளம் வீரர்கள் எவ்வாறு பிரகாசிக்க போகிறார்கள் என்ற ஆவலும் அதிகரித்துள்ளது. ஏற்கனவே இலங்கை அணி இங்கிலாந்து தொடர் முடிந்து வந்த பின்னர் சில வீரர்களுக்கு ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாக முற்றிலும் புதிய அணியாக இருக்கிறது.

இதனால் நிச்சயம் இந்திய அணியிடம் மிகப் பெரிய அளவில் இலங்கை தோல்வி அடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியில் பல இளம் வீரர்கள் இருந்தாலும் அவர்கள் அனைவரும் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் என்பதால் இலங்கை அணி தற்போது பரிதாப நிலையில் இருப்பது போன்றும் தெரிகிறது.

INDvsSL

இந்நிலையில் நாளைய போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை நாங்கள் கணித்துள்ளோம். ஏற்கனவே ராகுல் டிராவிட் கணித்த அணிதான் நிச்சயம் நாளைய போட்டியில் பங்கேற்கும் என்று தெரிகிறது. அந்த வகையில் நிச்சயம் ஓப்பனர்களாக தவான் மற்றும் பிருத்வி ஷா ஆகியோர் விளையாடுவார்கள். மூன்றாவது வீரராக சூர்யகுமார் யாதவ், நான்காவதாக வீரராக மனிஷ் பாண்டே விளையாடுவார்கள்.

- Advertisement -

அதுமட்டுமின்றி 5ஆவது வீரராக விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனும், ஆல்-ரவுண்டராக ஹார்டிக் பாண்டியா மற்றும் க்ருனால் பாண்டியாவும் விளையாடுவார்கள் என்று தெரிகிறது. பந்துவீச்சை பொறுத்தவரை புவனேஷ்வர் குமார் மற்றும் சைனி ஆகியோரும், சுழற்பந்து வீச்சாளர்கள் வரிசையில் சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் விளையாடுவார்கள் என்று கூறப்படுகிறது. இந்திய அணியின் உத்தேச லெவன் இதோ :

Bhuvi

1) தவான், 2) ப்ரித்வி ஷா, 3) சூரியகுமார் யாதவ், 4) மனிஷ் பாண்டே, 5) சஞ்சு சாம்சன், 6) ஹார்டிக் பாண்டியா, 7) க்ருனால் பாண்டியா, 8) புவனேஷ்வர் குமார், 9) சைனி, 10) சாஹல், 11) குல்தீப் யாதவ்

Advertisement