வெறும் 3 பேட்ஸ்மேன்கள் உடன் மட்டுமே களமிறங்கியுள்ள இந்திய அணி – இதை நோட் பண்ணீங்களா?

INDvsSL
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்கள் முடிவடைந்த வேளையில் இந்திய அணி தொடரை கைப்பற்றிய அசத்தியுள்ளது. தற்போது இன்று 3-வது டி20 போட்டி துவங்கியுள்ளது. முதல் இரண்டு ஆட்டங்களிலும் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்திய இந்திய அணியானது இன்றைய மூன்றாவது போட்டியிலும் இலங்கையை வீழ்த்தும் பட்சத்தில் நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணியை தொடர்ந்து இலங்கை அணியையும் சொந்த மண்ணில் ஒயிட் வாஷ் செய்து சாதனை படைக்க காத்திக்கிறது.

INDvsSL

- Advertisement -

அதேவேளையில் இந்திய அணியை ஒருமுறையாவது வீழ்த்திவிட வேண்டும் என்ற முனைப்பில் இலங்கை அணி உள்ளதால் இன்றைய போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ளது. சற்றுமுன்னர் தர்மசாலாவில் துவங்கிய மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் ஷனகா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி தற்போது இந்திய அணி முதலில் பந்துவீசி வருகிறது.

பின்னர் இந்திய அணியில் உள்ள மாற்றங்கள் குறித்து பேசியிருந்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் : நேற்றைய போட்டியில் காயம் அடைந்த இஷான் கிஷன் வெளியேற்றப்பட்டுள்ளார் என்றும் அதே போன்று இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டு வரும் புவனேஸ்வர் குமார், பும்ரா மற்றும் சாஹல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்படுகிறது என்று அறிவித்தார். இதன் காரணமாக இந்திய அணியில் நான்கு வீரர்கள் இந்த போட்டியில் விளையாட வில்லை என்பது உறுதியானது.

sanju samson

அவர்களுக்கு பதிலாக வாய்ப்புக்காக காத்திருந்த குல்தீப் யாதவ், ரவி பிஷ்னோய், முகமது சிராஜ் மற்றும் ஆவேஷ் கான் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த இலங்கை அணிக்கு எதிரான தொடரின் வீரர்கள் அறிவிக்கப்பட்டபோது பல வீரர்கள் காயம் காரணமாகவும், ஓய்வு காரணமாகவும் வெளியேறினர். குறிப்பாக இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களான கே.எல் ராகுல், விராட் கோலி, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் வெளியேறிய நிலையில் இஷான் கிஷனும் காயம் காரணமாக வெளியேறியுள்ளார்.

- Advertisement -

இதன் காரணமாக இன்றைய இந்திய அணியில் மூன்றே மூன்று ப்ராப்பர் பேட்ஸ்மேன்கள் மட்டுமே விளையாடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. துவக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோரும் 3வது இடத்தில் ஷ்ரேயாஸ் ஐயரை தவிர மற்ற அனைவரும் ஆல்ரவுண்டர்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஜடேஜா, வெங்கடேஷ் ஐயர், தீபக் ஹூடா ஆகிய ஆல்ரவுண்டர்களாக விளையாடுகின்றனர்.

இதையும் படிங்க : 3 ஆவது டி20 போட்டி : கடைசி போட்டிக்கான இந்திய அணியில் 4 மாற்றங்கள் – டாஸிற்கு பிறகு ரோஹித் பேசியது என்ன?

அதைத்தவிர்த்து குல்தீப் யாதவ், ரவி பிஷ்னாய், ஹர்ஷல் பட்டேல், சிராஜ் மற்றும் ஆவேஷ் கான் ஆகிய பந்துவீச்சாளர்களுடனும் இந்திய அணி இறங்கி உள்ளதால் 3 பேட்ஸ்மேன்களுடன் மட்டுமே இந்திய அணி களமிறங்கியுள்ளது என்று கூறலாம். இருப்பினும் இந்த அணியை கொண்டு இலங்கை அணியை வீழ்த்தும் பலம் நம்மிடம் இருக்கிறதா? என்று கேட்டால் நிச்சயம் உண்டு என்று கூறலாம். அந்த அளவிற்கு தற்போது இந்திய அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement