IND vs AUS : ஆஸ்திரேலிய அணிக்கெதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு – லிஸ்ட் இதோ

Kuldeep Yadav Ind Shubman gill kl rahul
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த வேளையில் அடுத்த மூன்றாவது டெஸ்ட் போட்டி மார்ச் 1-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அதனைத்தொடர்ந்து அகமதாபாத்தில் மார்ச் 9-ஆம் தேதி கடைசி டெஸ்ட் போட்டியானது துவங்க இருக்கிறது.

இந்த டெஸ்ட் தொடரானது முடிவடைந்த கையோடு இந்திய அணி, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. அதன்படி இந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது மார்ச் 17-ஆம் தேதி முதல் மார்ச் 22-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

- Advertisement -

இந்த ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ தங்களது அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் ரோகித் சர்மா கேப்டனாகவும், ஹார்டிக் பாண்டியா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதுமட்டும் இன்றி காயம் காரணமாக கடந்த பல்வேறு தொடர்களை தவறவிட்ட ரவீந்திர ஜடேஜா அணிக்கு திரும்பியுள்ளார். அதனை தவிர்த்து இந்திய அணியில் பெருமளவில் மாற்றங்கள் எதுவும் இல்லை. அதன்படி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் இதோ :

- Advertisement -

இதையும் படிங்க : அப்படினா சீக்கிரம் மொத்தமாக கழற்றி விடப்போறாங்கன்னு அர்த்தம் – நட்சத்திர இந்திய வீரரை எச்சரித்த ஹர்பஜன் சி

1) ரோஹித் சர்மா, 2) சுப்மன் கில், 3) விராட் கோலி, 4) ஷ்ரேயாஸ் ஐயர், 5) சூரியகுமார் யாதவ், 6) கே.எல் ராகுல், 7) இஷான் கிஷன், 8) ஹார்டிக் பாண்டியா, 9) ரவீந்திர ஜடேஜா, 10) குல்தீப் யாதவ், 11) வாஷிங்க்டன் சுந்தர், 12) யுஸ்வேந்திர சாஹல், 13) முகமது ஷமி, 14) முகமது சிராஜ், 15) உம்ரான் மாலிக், 16) ஷர்துல் தாகூர், 17) அக்சர் படேல், 18) ஜெய்தேவ் உனட்கட்.

Advertisement