அப்படினா சீக்கிரம் மொத்தமாக கழற்றி விடப்போறாங்கன்னு அர்த்தம் – நட்சத்திர இந்திய வீரரை எச்சரித்த ஹர்பஜன் சிங்

Harbhajan
- Advertisement -

கர்நாடகாவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுல் கடந்த 2014இல் அறிமுகமாகி சுமாராக செயல்பட்டாலும் 2019 போன்ற காலகட்டத்தில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி நிலையான தொடக்க வீரராக உருவெடுத்தார். ஆனால் நாளடைவில் தனது இடத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக பெரிய ரன்களை குவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அடித்து நொறுக்க வேண்டிய ஓப்பனிங் இடத்தில் தடவலாக செயல்பட்ட அவர் 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பை இந்தியாவின் தோல்விக்கும் ஒரு காரணமாக அமைந்தார். இருப்பினும் துணை கேப்டன் என்ற ஒரே காரணத்துக்காக அவருக்கு கொடுக்கப்படும் வாய்ப்பு சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு ஏன் கொடுக்கப்படுவதில்லை என்று ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தனர்.

அதனால் வேறு வழி தெரியாத பிசிசிஐ மற்றும் தேர்வுக்குழுவினர் ஒருநாள் கிரிக்கெட்டில் அவருடைய துணை கேப்டன்ஷிப் பதவியையும் மற்றும் ஓப்பனிங் ஓப்பனிங் இடத்தையும் பறித்து மிடில் ஆர்டரில் விக்கெட் கீப்பராக மட்டும் விளையாடும் வாய்ப்பை கொடுத்துள்ளது. அந்த நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் கடைசியாக கடந்த 2022 ஜனவரியில் சதமடித்திருந்த அவர் அதன் பின் பார்மை இழந்து ஒரு அரை சதம் கூட அடிக்காமல் சுமாராக செயல்பட்டு வருகிறார். ஆனாலும் துணை கேப்டன் என்ற ஒரே காரணத்துக்காக தொடர்ந்து வாய்ப்பு பெற்று வருவது வெங்கடேஷ் பிரசாத் போன்ற முன்னாள் வீரர்களையும் ரசிகர்களையும் கொந்தளிக்க வைத்துள்ளது.

- Advertisement -

கழற்றி விடப்போறாங்க:
அப்படி கடுமையான விமர்சனங்களை தாண்டி இந்த ஆஸ்திரேலிய தொடரில் வாய்ப்பு பெற்ற ராகுல் இதுவரை 20, 15, 1 என சொற்ப ரன்களில் அவுட்டானதால் கடந்த டிசம்பர் மாதம் வங்கதேச மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் சதமடித்து தற்போது உச்சகட்ட பார்மில் இருக்கும் சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு கொடுக்குமாறு மீண்டும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. அந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 2 போட்டிகளுக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் துணை கேப்டன் பதவியை இழந்துள்ள ராகுல் மீண்டும் விளையாடும் வாய்ப்பு பெற்றுள்ளார்.

மேலும் வெளிநாட்டு மண்ணில் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்திய ராகுலுக்கு இந்த மோசமான தருணத்தில் தொடர்ந்து வாய்ப்பு கொடுப்போம் என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் வெளிப்படையாக அறிவித்துள்ளார். இந்நிலையில் துணை கேப்டன் பதவியை இழந்துள்ள ராகுல் விரைவில் விளையாடும் 11 பேர் அணியில் வாய்ப்பை இழப்பதற்கு அதிக வாய்ப்புள்ளதாக முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். குறிப்பாக அவரது இடத்தில் சுப்மன் கில் வாய்ப்பை பெறுவார் என்று தெரிவிக்கும் ஹர்பஜன் சிங் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“தற்போது கேஎல் ராகுல் துணை கேப்டன் இல்லை. தற்போது கடைசி 2 போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. நீங்கள் துணை கேப்டனாக இல்லாத போது உங்களை எளிதாக அணி நிர்வாகத்தால் பெஞ்சில் அமர வைக்க முடியும். ஆனால் துணை கேப்டனாக இருந்தால் நீங்கள் சுமாராக செயல்பட்டாலும் விளையாடு 11 பேர் அணியில் இருப்பீர்கள். எனவே அடுத்த போட்டியில் ராகுலுக்கு பதில் சுப்மன் கில் வாய்ப்பு பெறுவார் என்ற காரணத்தாலேயே அவர் துணை கேப்டனாக அறிவிக்கப்படவில்லை என்று நான் கருதுகிறேன்”

“ஏனெனில் சமீபத்திய ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் அபாரமாக செயல்பட்ட சுப்மன் கில் நல்ல ஃபார்மில் இருக்கிறார். எனவே இப்போது அவர் வாய்ப்பு பெற்றால் நிச்சயமாக சூப்பர் ஹீரோவாக செயல்படுவார். மறுபுறம் 2வது டெஸ்ட் போட்டியில் அவுட்டான விதத்தில் தற்சமயத்தில் ராகுல் நல்ல பார்மில் இல்லை என்பதை தெளிவாக காட்டியது. அவர் தரமான பெரிய வீரர் என்பதில் சந்தேகமில்லை என்றாலும் அவருடைய செயல்பாடுகளும் புள்ளி விவரங்களும் இன்னும் சற்று சிறப்பாக இருக்க வேண்டும்”

இதையும் படிங்க: ஒருநாள் அணியில் ராகுலுக்காக பாவப்பட்ட அவர நைசா கழற்றி விட்ட நீங்க வேற லெவல் – தேர்வுக்குழுவை விளாசும் ரசிகர்கள்

“அவர் இந்திய அணியில் மட்டுமல்லாமல் உலக அளவில் டாப் கிளாஸ் வீரர் என்று நான் கருதுகிறேன். ஆனால் இந்த சமயத்தில் ராகுல் ஒரு இடைவெளி எடுத்து உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி நிறைய ரன்களை அடிப்பது தன்னுடைய இழந்த தன்னம்பிக்கையும் பார்மையும் மீட்டெடுக்க உதவும். அப்போது அவரை மீண்டும் இந்திய அணிக்கு தேர்வு செய்யுங்கள். அவர் தரமான வீரர் என்பதில் கொஞ்சமும் சந்தேகமில்லை” என்று கூறினார்.

Advertisement